AC Bed Sheet: ஏசி தெரியும்! ஏசி பெட்சீட் கேள்விபட்டு இருக்கீங்களா? வெறும் ரூ.699 தான்!

கோடை காலத்தில் மக்கள் குளிர்ச்சியை தேடி செல்கின்றனர்.  வீடுகளில் ஏர் கண்டிஷனர் மற்றும் ஏர் கூலர்களை பொருத்துவது சற்று விலையுயர்ந்ததாக இருக்கிறது.  எல்லோராலும் வீடுகளில் ஏர் கண்டிஷனரை பொறுத்த முடியாது, அப்படிப்பட்டவர்களுக்காகவே பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது ஏசி பெட் ஷீட்கள்.  இந்த பெட்ஷீட்டின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பெட்ஷீட் படுக்கையில் போட்டவுடன் ஐஸ் போல குளிர்ச்சியடைகிறது.  நீங்கள் அதை ஆன்லைனில் அல்லது உள்ளூர் சந்தையில் மிக எளிதாக வாங்கி கொள்ளலாம்.  இந்த ஆடம்பரமான பெட் ஷீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய முழு விவரங்களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.  ஏர் கண்டிஷனர் மற்றும் ஏர் கூலர் போன்றவற்றில் இருப்பதை போல இந்த குறிப்பிட்ட வகை பெட் ஷீட்டில், குளிர்விப்பதற்கான மின்விசிறிகள் உங்களுக்கு வழங்கப்படவில்லை.  உங்களுக்கு குளிர்ச்சியை கொடுக்க ஜெல் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஜெல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் தான் இந்த படுக்கை விரிக்கப்பட்டதும் எவ்வித அதிர்வையும் ஏற்படுத்துவதில்லை.  

தற்போது, ​​ஏசி பெட் ஷீட்களின் பல தயாரிப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன.  ஏராளமான ஆன்லைன் தளங்களிலும் பல ரகங்களில் இந்த வகை பெட்ஷீட்கள் கிடைக்கிறது மற்றும் உள்ளூர் கடைகளிலும் இந்த வகை பெட்ஷீட்கள் கிடைக்கிறது.  உண்மையில், இந்த தயாரிப்புகளின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் படுக்கையில் படுத்தவுடன் இது உங்களை மிகவும் குளிர்ச்சியாக உணரச்செய்யும்.  கோடை காலத்தில் இந்த வகை பெட்ஷீட்களுக்கு அதிக மவுசு இருப்பதால், பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் இந்த பெட்ஷீட்டை வாங்கி விடுகின்றனர்.  ஏசி பெட் ஷீட் எனப்படும் இந்த பொருளின் பெயர் கூலிங் ஜெல் மெத்தை ஆகும், இந்த பெட்ஷீட்டுகள் பல பெரிய முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த சாதனம் இணைக்கப்பட்டவுடன் அது மிக வேகமாக குளிர்ச்சியடையத் தொடங்குகிறது, இந்த கூலிங் பெட்ஷீட்டை போட்டதும் அதன் மேல் சாதாரண பெட் ஷீட்டையும் நீங்கள் போடலாம்.  தற்போது, ​​இதுபோன்ற பல பொருட்கள் உலகம் முழுவதும் சந்தையில் கிடைக்கின்றன, அவை ஏர் கண்டிஷனர் படுக்கை விரிப்பாக வேலை செய்கின்றன.

கூலிங் ஜெல் மெத்தையை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம், அதிலும் குறிப்பாக இந்த கோடைகாலத்தில் நீங்கள் இந்த மெத்தையை சிறந்த தள்ளுபடி விலைகளில் வாங்கி பயனடையலாம்.  இந்த கூலிங் ஜெல் மெத்தையின் ஆரம்ப விலை ரூ.699லிருந்து தொடங்குகிறது.  இருப்பினும் இந்த பெட்ஷீட்டின் உண்மையான விலை அதன் பிராண்ட் மற்றும் அம்சங்களைப் பொறுத்து மாறுபடும்.  அமேசானில் ஏர் கண்டிஷனர் பெட் ஷீட் என்று அழைக்கப்படும் இந்த கூலிங் ஜெல் மெத்தை விற்பனை செய்யப்படுகிறது.  இது குளிரூட்டும் சாதனம் என்பதால், அதை ஒருபோதும் தண்ணீரில் கழுவக்கூடாது.  அதில் ஏதேனும் மாசு அல்லது அழுக்கு ஏற்பட்டால், சிறிது ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.