Whatsapp விரைவில் வெளியிடப்போகும் நான்கு புதிய அப்டேட்ஸ்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகளவில் பிரபல சமூகவலைத்தளமாக இருக்கும் Whatsapp அதன் Android மற்றும் ios பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. WABetainfoவில் வெளியான விவரங்களின் அடிப்படையில் நான்கு புதிய வசதிகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Password Reminder Feature

இனி புதிதாக ‘Password Reminder’ என்ற வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கு கிடைக்கும். End to End பாதுகாக்கப்பட்ட நமது பாஸ்வேர்ட் தவறாக இருந்தால் அதை நாம் மாற்றிக்கொள்ளலாம். இந்த பாதுகாக்கப்பட Password இனி Apple மற்றும் Google என எந்த நிறுவனத்தாலும் பார்க்கமுடியாத வகையில் தனியாக Meta நிறுவனத்தால் பாதுகாக்கப்படும்.

Whatsapp Chat Lock வசதி மூலம் நமது தனிப்பட்ட மெசேஜ்களை பாதுகாக்கலாம்!

Screen Sharing in Video calls

நாம் ஒருவருடன் வீடியோ கால் பேசும்போது நம்முடைய ஸ்க்ரீன் மற்றவர்களுக்கு தெரியும் வகையில் ஸ்க்ரீன் ஷேர் செய்யமுடியும். Google Meet, Zoom போன்ற ஆப்களில் இந்த screen sharing வசதி இடம்பெறுகிறது. அதே போன்ற வசதியை Whatsapp நிறுவனம் இனி பயனர்களுக்கு வழங்கவுள்ளது. ஆனால் இதை பயனர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே செய்யமுடியும்.

புதிய பயனர் பெயர்

நமக்கு பிடித்தமான பெயர்களை நமது Whatsapp கணக்குகளுக்கு வைத்துக்கொள்ளலாம். இது தற்போது ஆக்கத்தில் இருப்பதால் விரைவில் இதை அப்டேட் மூலம் எதிர்பார்க்கலாம். நமது பெயர்கள் விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். இனி மொபைல் எண்களுக்கு பதிலாக நமது பெயர்களை பயன்படுத்தியே அடுத்தவர்களிடம் சேட் செய்யலாம்.

Whatsapp Edit வசதியை இனி பயன்படுத்தலாம்! எப்படி எடிட் செய்வது?

புதிய Settings பக்கம்

இனி Whatsapp செயலியில் புதிதாக Settings Interface இடம்பெறும். ஆனால் இது Android போன்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதில் புதிதாக Profile, Privacy, Contacts போன்ற Shortcut இடம்பெறும். இதனால் இவற்றை எல்லாம் நாம் தனியாக தேடவேண்டிய அவசியம் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.