இனி ஓடிடியிலும் புகையிலை எச்சரிக்கை வாசகம்… மத்திய அரசு உத்தரவு!

சென்னை : ஓடிடியிலம் புகையிலை எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை வாசகம் : திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ வந்தால், புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகமும், மது நாட்டுக்கும் உடல் நலத்திற்கும் கேடு என்ற வாசம் இடம் பெற்று இருக்கும். ஆனால், ஓடிடி தளங்களில் மது குடிக்கும் காட்சியோ பிடிக்கும் காட்சியோ வந்தால், எந்த விதமான எச்சரிக்கை வாசமும் இடம் பெறுவதில்லை.

ஓடிடியில் தணிக்கை இல்லை : கொரோனாவுக்கு பின் ஓடிடி தளங்களில் எண்ணிக்கை ஏகத்திற்கும் அதிகரித்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஓடிடி தளங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக ஓடிடி தளங்களிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதில் வரும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் தணிக்கை இல்லை என்பதால், மது, புகை, ஆபாச வசனங்கள் ஆகியவை தாராளமாக இடம்பெறுகின்றன.

மத்திய அரசு உத்தரவு : இந்நிலையில் ஓடிடிதளங்களில் வெளியாகும் திரைப்படம் மற்றும் தொடர்களில், புகையிலை எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்வது பற்றி மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிப்பரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை : சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விதிகளை திருத்தியமைத்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைன் உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றத் தவறினால், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.