சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் வேதனை – இன்னும் எத்தனை நாள் தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, 03.06.2023 முதல் 05.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06.06.2023 மற்றும் 07.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

03.06.2023 மற்றும் 04.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்);

தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 5, பொதுப்பணித்துறை (திருப்பூர்), காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் தலா 4, பார்வூட் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), செஞ்சி (விழுப்புரம்) தலா 3, உத்திரமேரூர் (திருவண்ணாமலை), (திருவண்ணாமலை) (கோயம்புத்தூர்),

(காஞ்சிபுரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்), சேத்துப்பட்டு ஊத்துக்குளி (திருப்பூர்), கோயம்புத்தூர் தெற்கு, செய்யாறு தலா 2, வளத்தி (விழுப்புரம்), பூண்டி (திருவள்ளூர்), சூலூர் திருப்பூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), TNAU கோயம்புத்தூர் தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

03.06.2023 முதல் 07.06.2023 வரை: மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், இலட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள், மத்திய அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.06.2023 மற்றும் 04.06.2023: கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.