இந்த கோர விபத்துக்கு இவர் தான் காரணம்… வெளியானது அதிர்ச்சி தகவல்…. ரெயில்வே சர்க்கியூட் ஆதாரம்..!

3 ரெயில்கள் உடைந்து நொருங்கி உருகுலைந்து கிடக்கும் இந்த கழுகுப்பார்வை காட்சி படமாக்கப்பட்ட இடம் ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநகா பஜார் ரயில் நிலையம்..!

இந்த ரெயில் நிலையத்தின் இரு புறங்களில் லெவல் கிராசிங் உள்ள நிலையில், இரு லூப் லைன்களும், இரு மெயின் லைன்களும் கொண்ட தண்டவாளங்கள் உள்ளது. சம்பவத்தன்று அதில் லூப் லைன்களில் இரு சரக்கு ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஒட்டிய மேல் புறம் உள்ள மெயின் லைனில் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது.

பாஹநகா பஜார் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லை என்பதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாக கூறப்படுகின்றது. அந்த ரெயில் பாஹநகா பஜார் ரெயில் நிலையத்தை அடைவதற்கு சற்று முன்பாக திடீரென லேன் மாற்றப்பட்டு லூப் லைனில் நுழைந்துள்ளது. சரியாக மாலை 6: 55 மணிக்கு அங்கு நின்று கொண்டு இருந்த சரக்கு ரெயில் மீது அதி வேகத்தில் மோதி அதன் மீது ஏறி நின்றதில் சில பெட்டிகள் உடைந்து சிதறியது… ஒட்டு மொத்தமாக 21 பெட்டிகள் தடம் புரண்டன

அதில் 3 பெட்டிகள் கீழ் புறம் உள்ள மெயின் லைனில் விழுந்த நிலையில் அடுத்த சில வினாடிகளில் பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கிச்சென்று கொண்டிருந்த துரந்தோ விரைவு ரெயில் விழுந்து கிடந்த 3 பெட்டிகள் மீது மோதின. இதில் அந்த 3 பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டன, இதில் யஷ்வந்த் பூர் ரெயிலின் 2 பெட்டிகளும் தடம் புரண்டது.

இந்த விபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை நோக்கி முன்பதிவு செய்யப்பட்டாத பெட்டிகளில் பயணித்த நூற்றுகணக்காண ஏழை தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பலரை அடையாளம் காண இயலாத நிலையில் அவர்களது சடலங்களை குப்பையை போல சரக்கு வாகனத்தில் தூக்கிப்போட்டுச்சென்ற காட்சிகள் இதயத்தை கனக்கச்செய்தன

இந்த விபத்தில் நூற்றுக்கணக்காக ஏழை தொழிலாளர்கள் கைகால்களை இழந்து சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான பயணிகளின் கனவுகளை, காவுவாங்கிய இந்த கோர விபத்துக்கு பாஹநகா பஜார் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் நிகழ்ந்த குளறுபடியே காரணம் என்பதற்கு முக்கிய ஆதாரமான சர்க்கியூட் வீடியோ வெளியாகி உள்ளது

இந்த விபத்துக்கு நாசவேலை காரணமல்ல என்று தெரிவித்துள்ள ரெயில்வே அதிகாரிகள், அங்குள்ள ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல்களையும், லேன்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியின் கவனக்குறைவு இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் விபத்து நடந்த நேரத்தில் அந்த லேன்களில் உள்ள சிக்னல்களில் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் கணினி பதிவுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்

ஒரே தண்ட வாளத்தில் இரு ரெயில்கள் வந்தால் சென்சார் மூலம் உணர்ந்து தானாக எச்சரிக்கும் கவச் தொழில் நுட்பம் இந்த தடத்தில் பொருத்தப்பட்டிருந்ததால் இப்படி ஒரு கோர விபத்து நிகழ்ந்திருக்காது என்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மேற்குவங்க முதல்வர் மம்தாபேனர்ஜி தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து ரெயில்வே துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் தனித்தனியாக தங்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.