Thalapathy 68: தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபு போட்ட மாஸ்டர் பிளான்..இப்போவே ஸ்டார்ட் பண்டாரே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தளபதி 68 திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார். விஜய், வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா என புது கூட்டணியில் இப்படம் உருவாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.

Leo: தளபதி பர்த்டே ஸ்பெஷல்..லியோ படக்குழு வெளியிடப்போகும் சர்ப்ரைஸ்..ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

என்னதான் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கடைசி படமான கஸ்டடி திரைப்படம் தோல்வி அடைந்தாலும் அவரின் மீது நம்பிக்கை வைத்து விஜய் தன் அடுத்த படத்தை கொடுத்துள்ளார். எனவே அஜித்திற்கு ஒரு மங்காத்தா, சிம்புவிற்கு ஒரு மாநாடு என இரு நடிகர்களுக்கும் மெகாஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் ஒரு மெகாஹிட் படத்தை கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் தளபதி 68 படத்தின் பூஜை ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஜூலை மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.படத்திற்கு படம் விஜய் வசூலில் சாதனை படைத்து வருவதால் அவரின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. இதுஒருபக்கம் இருக்க தளபதி 68 படம் விஜய் படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களின் மூலம் வெங்கட் பிரபு புதுமை படைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

பெரும்பாலும் வெங்கட் பிரபு படங்கள் என்றாலே வித்தியாசமானதாக இருக்கும். அதைப்போல இப்படம் வித்யாசமாக இருக்கும் என்றும், படத்தைப்போல படத்தின் ப்ரோமோஷன்களும் மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் பூஜை துவங்கும் வீடீயோவை வெங்கட் பிரபு வித்யாசமாக உருவாக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.