Thalapathy 68: வெங்கட் பிரபுவிடம் விஜய் கேட்டுக்கொண்டது இதுதான்..வெளிப்படையாக பேசிய கங்கை அமரன்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தை பற்றித்தான் ஒட்டுமொத்த திரையுலகமும் பேசி வருகின்றனர். விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வந்தாலும் அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தளபதி.

மேலும் தன் 68 ஆவது படத்திற்காக விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது. யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணைவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Ajith: விடாமுயற்சி படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ? செம ட்விஸ்ட்டா இருக்கும் போலயே..!

AGS தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கயிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தளபதி 68 படத்தின் பூஜை நடைபெறுமாம். அநேகமாக விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி தளபதி 68 பூஜை நடைபெறும் என்றும், ஜூலை மாதம் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனரும், வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தளபதி 68 படத்தை பற்றி பேசிய விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு விஜய் வெங்கட் பிரபுவை பாராட்டி தள்ளினார்.

மேலும் இதுபோன்ற ஒரு கதையில் தான் நடிக்க விரும்புவதாகவும் வெங்கட் பிரபுவிடம் கூறினாராம் விஜய். இதை கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் இதையடுத்து ரசிகர்கள் தளபதி 68 படத்தை பற்றி கணிக்க துவங்கிவிட்டனர். அதாவது மங்காத்தா படத்தை போல ஒரு விறுவிறுப்பான மற்றும் வித்யாசமான படமாகத்தான் தளபதி 68 இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

இதையடுத்து தளபதி 68 படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றது.

அது போல சமீபத்தில் விஜய் தளபதி 68 படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக வித்யாசமான கெட்டப்பில் விஜய் தோன்றுவார் எனவும் தகவல்கள் வர ரசிகர்கள் இதைக்கேட்டு எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.