துருக்கி அதிபருக்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த சிறுவன் கைது..!

துருக்கியில், அதிபர் எர்டோகனின் புகைப்படத்திற்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.

அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலின்போது, எர்டோகன் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில், சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை வரைந்து உள்ளான்.

மேலும், அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அவனது வீட்டை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில், மீசை வரைந்ததை சிறுவன் ஒப்பு கொண்டான்.

கடந்த ஆண்டு 16,000க்கும் மேற்பட்டோர் மீது அதிபரை அவமதித்தது தொடர்பாக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.