பத்திரிகையாளர் கேட்ட அந்த கேள்வி… படபடத்து போன உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க. இளைஞரணிச் செயலாளரான

நடந்து முடிந்தத சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏவான 1½ வருடத்திலேயே அமைச்சர் பொறுப்பை பெற்றார் உதயநிதி ஸ்டாலின். தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

உதயநிதி அமைச்சர் ஆன பிறகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் ஆன பிறகு உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்தும் ஒதுங்கிவிட்டார். அமைச்சர் ஆன பின்பு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் அடுத்த 3 வருடங்களுக்கு படங்களில் நடிக்கப் போவதில்லை என கூறினார்.

சமீபத்தில் ஒடிசாவில் நடந்த சென்னை கோரமண்டல் ரயில் விபத்து குறித்து அமைச்சர் சிவசங்கருடன் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின். மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும் போது அமைச்சர் உதயநிதியை முன்னிலைப்படுத்தவே அவரை ஒடிசா ரயில் விபத்து பகுதிக்கு அனுப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை கொடுத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை போலவே கேலோ இந்தியா நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி கொடுப்போம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் மட்டும் கேலோ இந்தியா நிகழ்ச்சியை நடத்துவதா அல்லது மதுரை கோவை ஆகிய இடங்களிலும் நடத்துவதா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தைகளில் அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப் போவதாக தகவல் பரவி வருகிறதே என்று கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்டு ஷாக்கான உதயநிதி ஸ்டாலின் எங்கிருந்து இந்த தகவல் வந்தது? எனக்கு வராத தகவல் உங்களுக்கு எப்படி வந்தது என தொடர்ந்து கேட்டார். பின்னர் இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்று தனக்கு தெரியாது என கூறிவிட்டு சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.