மும்பை விடுதியில் மாணவி வன்கொடுமை, கொலை… தற்கொலை செய்துகொண்ட வாட்ச்மேன் உள்ளே சென்றது எப்படி?!

மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில், 3 நாள்களுக்கு முன்பு தனியாக தங்கி இருந்த 18 வயது மாணவியை அதே விடுதியில் வாட்ச்மேனாக பணியாற்றும் ஓம் பிரகாஷ் என்பவர் இரவில் விடுதிக்குள் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு ஓம் பிரகாஷும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில் ஓம் பிரகாஷ் எப்படி விடுதிக்குள் சென்றார் என்று தெரிய வந்துள்ளது. பொதுவாக இரவு நேரத்தில் விடுதியின் முன் அறை அடைக்கப்பட்டு விடும். அதன் பிறகு உள்ளே யாரும் செல்ல முடியாது. இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், `ஓம் பிரகாஷ் விடுதியின் முன்பகுதி வழியாக உள்ளே சென்றதற்கான வாய்ப்புகள் இல்லை. விடுதி கட்டடத்தின் பின்புறம் இருக்கும் கழிவு நீர் பைப் வழியாக மேலே ஏறி இருக்கவேண்டும்.

ஓம் பிரகாஷ்

கட்டடத்தின் பின்புறம் வாட்ச்மேன் செருப்பு ஒன்று கிடக்கிறது. முதல் மாடி வரை பைப் வழியாக ஏறி கட்டடத்தில் இருந்த இடைவெளி வழியாக உள்ளே சென்று அங்கிருந்து படிக்கட்டு மூலம் நான்காவது மாடிக்கு சென்று இருக்கவேண்டும். அதிகாலை நேரத்தில் நான்காவது மாடிக்கு சென்று மாணவியின் கதவையும் திறக்கவில்லை. கதவுக்கு மேல் இருந்த துவாரத்தின் வழியாக உள்ளே சென்று இருக்கவேண்டும். அத்துவாரத்தில் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு மீண்டும் அதே வழியாக வெளியில் வந்திருக்கவேண்டும். எனவேதான் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட மாணவியுடன் அதே விடுதியில் தங்கியிருக்கும் மற்றொரு மாணவி இது குறித்து கூறுகையில், “கொலை நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு இதே வாட்ச்மென் நள்ளிரவில் மாணவியின் அறை கதவை தட்டியிருக்கிறார். மாணவி கதவை திறந்த போது, `நீ உறங்குவதை பார்க்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். உடனே அவரை வெளியில் தள்ளி மாணவி கதவை பூட்டியிருக்கிறார். இதை மாணவி விடுதி வார்டனிடம் தெரிவித்தார். ஆனால் வாட்ச்மேன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

க்ரைம்

மாணவியின் பெற்றோர் அகோலாவில் இருந்து வந்து தங்களது மகளின் உடலை பெற்று தாதரில் இறுதிச்சடங்கு செய்தனர். மாணவியின் தந்தை இது குறித்து கூறுகையில், “வாட்ச்மேன் சில நாள்களாகவே என் மகளை துன்புறுத்தி வந்துள்ளார். புகார் செய்தவுடன் வாட்ச்மென் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் என் மகள் இப்போது உயிரோடு இருந்திருப்பார்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.