WTC Final 2023: போட்டியின் இரண்டாம் நாளில் ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, முகமது சிராஜின் சாதனைகள்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ரன்களை குவித்து வரும் நிலையில், இந்திய பிளேயிங் லெவனில் அஸ்வின் இல்லாதது, ஆடுகளத்தில் டாஸ் வென்றாலும் பந்துவீச முடிவெடுத்தது என இந்திய அணி மீது பல விமர்சனங்கள் இருந்தபோதிலும், நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பல பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஸ்டீவ் ஸ்மித், தனது 31வது சதத்தை பதிவு செய்தார். அஜிங்க்யா ரஹானே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் சாதனைகளை படைத்தனர். 

ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் சிறந்த பதிவுகள் இவை

அஜிங்க்யா ரஹானே: டெஸ்டில் 100 கேட்சுகள் பிடித்த 7வது இந்திய வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்சுகள் பிடித்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையை அஜிங்க்யா ரஹானே பெற்றார். முகமது சிராஜின் பந்து வீச்சில் பாட் கம்மின்ஸின் கேட்ச் மூலம் ரஹானே இந்த சாதனையை நிகழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்சுகளுக்கு மேல் பிடித்து இந்திய சாதனை படைத்துள்ளவர்  ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முகமது சிராஜ்: 19 டெஸ்ட் போட்டிகளில் 50வது விக்கெட் 
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது 19வது டெஸ்டில் 50வது விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா தற்போது இந்தியாவுக்காக மிக வேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக உள்ளார், 

நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப்

ஓவல் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் 4வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் நான்காவது விக்கெட்டில் இணைந்து  285 ரன்கள் சேர்த்தனர். ஓவலில் விளையாடிய டெஸ்டில் நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 1936ல் இந்தியாவுக்கு எதிராக வாலி ஹம்மண்ட் மற்றும் ஸ்டான் வொர்திங்டன் எடுத்த 266 ரன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்காக அதிக சதம் அடித்த 3வது வீரர் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியின் 2வது நாளில் தனது 31வது டெஸ்ட் சதத்தை அடித்தார். இதன் மூலம், அவர் மேத்யூ ஹைடனின் 30 சதங்களை முறியடித்தார் மற்றும் ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த மூன்றாவது வீரர் ஆனார். ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் வாஹ் 32 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 
 
இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் 9வது சதம் அடித்து சாதனை 
ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார், இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஜோ ரூட்டின் எண்ணிக்கையை சமன் செய்தார்.

டிராவிஸ் ஹெட் தனது 2வது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 163 ரன்களை பதிவு செய்தார், இது ஒரு டெஸ்ட் போட்டியில் அவரது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். 2022ல் அடிலெய்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் எடுத்த 175 ரன்கள் அவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆகும்.  

இது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் நிலவரம்

முதலாம் செஷன்: ஆஸ்திரேலியா – 24 ஓவர்கள் – 95 ரன்கள் – 4 விக்கெட்டுகள்

இரண்டாம் செஷன்: ஆஸ்திரேலியா – 12.1 ஓவர்கள் – 47 ரன்கள் – 3 விக்கெட்டுகள்

இந்தியா – 10 ஓவர்கள் – 37 ரன்கள் – 2 விக்கெட்டுகள்

மூன்றாம் செஷன்: இந்தியா – 28 ஓவர்கள் – 114 ரன்கள் – 3 விக்கெட்டுகள்

ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.