Realme 11 Pro Plus 5G விற்பனை துவக்கம்! 27,999 ஆயிரத்தில் சிறந்த 5G போன்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவில் Realme அதன் புதிய Realme 11 Pro 5G போன்களின் விற்பனையை துவக்கியுள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் வெளியான இந்த போன்கள் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன்
செக்மென்ட்டில் மிகப்பெரிய கேமரா, திறன், சிறப்பு வசதிகளுடன் இந்த போன் வெளியாகியுள்ளது.

​Realme 11 Pro Plus 5G விவரம்இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 15 மதியம் 12 மணிக்கு துவங்கி ஜூன் 18 மதியம் 11.59 மணி வரை விற்பனை செய்யப்படும். இதன் 8GB வேரியண்ட் போனிற்கு 2 ஆயிரம் ரூபாய் வங்கி சலுகை கிடைக்கிறது.டிஸ்பிளே வசதிஇந்த போனில் 6.67 இன்ச் கர்வ் OLED டிஸ்பிளே திரை, 120HZ refresh rate, 93.65% Screen to Body Ratio உள்ளது. இதில் ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி வசதி 120W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இதன்மூலம் 100% சார்ஜிங் அள்வு வெறும் 26 நிமிடங்களில் அடைந்துவிடும்.கேமரா வசதிகள்கேமரா அம்சமாக இதில் 200MP OIS முக்கிய கேமரா வசதி, 8MP அல்ட்ரா வைட் கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் முன்பக்கம் 32MP செல்பி கேமரா வசதி உள்ளது. இதில் ISOCELL HP3 SuperZoom சென்சார் வசதி இடம்பெறுகிறது.திறன் வசதிகள்இதன் திறன் வசதிக்காக Mediatek Dimensity 7050 சிப், 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், 12GB RAM, 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் இடம்பெறுகிறது. இதில் Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Realme UI 4 OS உள்ளது.விலை மற்றும் சலுகைகள் (Realme 11 Pro Plus 5G price)இந்த போன் 8GB மற்றும் 12GB என்று இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடலான 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 27,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 29,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.ஆரம்ப கால சலுகையாக இதன் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 2 ஆயிரம் ரூபாய் சலுகையுடன் 25,999 ஆயிரத்திற்கு கிடைக்கும். மேலும் பழைய Realme போன்களை Exchange செய்தால் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் சலுகை பெறலாம். இதன் 12 GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு 12 மாதங்கள் வரை No Cost EMI சலுகை கிடைக்கும்.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.