#சிதம்பரம் | அரசுப் பள்ளியில் கொட்டிக்கிடந்த அமிலத்தில் அமர்ந்த 12ம் மாணவன் கவலைக்கிடம்!

கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவன் அப்துல் ஹமீது, வழக்கம் போல் இன்று பள்ளி சென்றுள்ளார். 

அன்றைய தினம் வகுப்பறையில் உள்ள மின்விசிறி வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக, மாணவன் அப்துல் ஹமீது உள்பட அனைத்து மாணவர்களையும் பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தில் உள்ள இருக்கையில் அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர். 

மாணவன் அப்துல் ஹமீது அமர்ந்த அந்த இருக்கையில் ஏற்கனவே அமிலம் கொட்டியிருந்ததால், மாணவனின் ஆடையில் அமிலங்கள் பட்டு உடலில்  எரிச்சல் ஏற்ப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அந்த மாணவனுக்கு சிகிச்சை ஏதும் அளிக்காமல் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற மாணவன் அப்துல் ஹமீது மயங்கி விழுந்துள்ளன. உடனடியாக மாணவனை அரசு மருத்தவமனையில் பெற்றோர்  அனுமதித்தனர். 

அங்கு மருத்துவர்கள் மாணவனை பரிசோத்ததில், உடலில் பட்ட அமிலமானது சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் கலந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மாணவனுக்கு தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

மாணவன் அப்துல் ஹமீதுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு அரசுப் பள்ளியின் பராமரிப்பில் முறையாக கவனம் செலுத்தாத நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என்று, மாணவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும், மாணவனுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.