அட அப்படியா? iPhone 14 -இன் ‘அந்த’ 4 அம்சங்கள் iPhone 15 -இல் இருக்கும்!!

ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இது குறித்த கசிவுகள் மற்றும் வதந்திகள் சில நாட்களாக ஐபோன் பிரியர்களுக்கு இடையே பலமான சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2023 -இல் வரவுள்ள இந்த ஐபோன் எப்படி இருக்கும் என்று கசிவுகள் கூறியுள்ளன. iPhone 14 Pro இன் நான்கு அம்சங்கள் iPhone 15 இல் கிடைக்கும் என இந்த கசிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ. 1.2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த போனில் இந்த அம்சங்கள் கிடைக்கின்றன. அந்த பிரீமியம் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

iPhone 15 -இல் iPhone 14 Pro -வின் நான்கு அம்சங்கள் இருக்கும்

– கடந்த ஆண்டு, ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஐபோன் 15 மற்றும் பிளஸில் கிடைக்கும் என கசிவுகளில் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்த முறை போன் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் இது குறித்து ஆப்பிள் நிறுவனம் எதுவும் கூறவில்லை. இந்த வடிவமைப்பு தற்போது ப்ரோ மாடல்களில் கிடைக்கின்றது. கடந்த ஆண்டு, ஐபோன் 14 எந்த வடிவமைப்பு மாற்றமும் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​​​அது அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை வடிவமைப்பு மாற்றங்களைக் காண முடியும் என ஊகிக்கப்படுகிறது. 

– கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 ப்ரோ மாடலில் இருந்து சில அம்சங்களை பெற்றுள்ள ஐபோன் 15 ஆனது மேட் ஃபினிஷ் கொண்ட உறைந்த கண்ணாடி பின்புற பேனலை கொண்டிருக்கும். 

– ஐபோன் 15 ஆனது கடந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ மாடல்களுடன் வந்த பயோனிக் ஏ16 சிப்செட்டைக் கொண்டிருக்கும். கடந்த ஆண்டு ஃபிளாக்ஷிப் போனின் சிப்செட் ஐபோன் 14 -இல் கொடுக்கப்பட்டது. புதிய போன்களிலும் இது நிகழலாம்.

– ஐபோன் 15 மாடல் கேமராக்களின் அடிப்படையில் மிகப்பெரிய மேம்படுத்தலைப் பெறும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 14 தொடரின் ப்ரோ மாடல்களில் நாம் பார்த்த அதே 48 மெகாபிக்சல் கேமராக்கள் வழக்கமான பதிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய ஐபோன் மாடலில் காணப்படும் 12எம்பி சென்சார் விட இது ஒரு பெரிய மேம்படுத்தலாக இருக்கும். ஆனால், ஸ்டாண்டர்ட் மாடலில் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. 

இந்த அம்சம் அனைத்து மாடல்களிலும் கிடைக்கும்

இந்த ஆண்டு ஆப்பிள் லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக கீழே யுஎஸ்பி டைப் சி போர்ட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றியம் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கு 2024 க்குள் ஒற்றை சார்ஜிங் போர்ட்டைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியது. விதிகளின் படி, ஆப்பிளின் சாதனங்கள் USB-C ஐப் பயன்படுத்துவது அவசியமாகும். ஆகையால் இந்த ஐபோனில் போர்ட் சி இருக்கும் என கூறப்படுகின்றது. 

ஐபோன் 15: விலை விவரங்கள் 

ஐபோன் 15 தொடர் ரூ.80,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் ஆகக்கூடும். மேலும் அதன் ப்ரோ மாடலின் விலை ரூ.1,30,000 வரை இருக்கலாம். நிறுவனம் ஐபோன் 14  -ஐ செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே இந்த ஆண்டும் அந்த மாதத்திலேயே புதிய தொடரையும் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.