கேப்டன்னா எனக்கு அது விராட் கோலி தான்! தோனியை சூசகமாக குத்துகிறாரா யுவராஜ் சிங்?

புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இரண்டு உலக கோப்பை வெற்றிகளிலும் இந்திய அணியின் நட்சத்திரமாக இருந்தார். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் யுவராஜ் சிங்கின் பங்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்துக்கு எதிராக கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியிலும் அற்புதமான அரை சதங்களை அடித்தார், அதே நேரத்தில் 2011 உலகக் கோப்பையில் போட்டியின் சிறந்த வீரராகவும் விளங்கினார்.

இருப்பினும், யுவராஜ் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு காரணம், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தான். அதன்பிறகு, அவர் சிகிச்சைக்காக சென்றுவிட்டார்.

அவர் 2012 இல், சிகிச்சைக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பியபோது, அவர், அதற்கு முன் இருந்த பேட்டர் என்று சொல்ல முடியாது, சிகிச்சைக்குப் பிறகு அணியில் தனது இடத்தை தக்கவைக்க போராடினார்.

யுவராஜ் சிங் தனது கடைசி ஒருநாள் போட்டியில் 2017 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடினார், அதே ஆண்டில் அவர் தனது அதிகபட்ச ODI ஸ்கோரான 150 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக அடித்தார்.

டி20 போட்டிகளில் யுவராஜ் சிங்கிற்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன, ஆனால் அவரது செயல்திறன் தேவைக்கு ஏற்றதாக இல்லை.

சிகிச்சைக்குப் பிறகு, இந்திய அணிக்கு தனது மறுபிரவேசம் பற்றி தனது எண்ணத்தைப் பகிர்ந்துக் கொண்ட அவர், இந்திய அணிக்கு மீண்டும் வருவதற்கு விராட் கோலி தான் உதவினார் என்று கூறினார். கோஹ்லி இல்லையென்றால், இந்திய அணிக்கு மீண்டும் வந்திருக்க முடியாது என்று யுவராஜ் கூறினார்.

“நான் மீண்டும் திரும்பியபோது, விராட் கோலி எனக்கு ஆதரவளித்தார், அவர் எனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், நான் மீண்டும் வந்திருக்க மாட்டேன். ஆனால் 2019 உலகக் கோப்பையைப் பற்றி தேர்வாளர்கள் பார்க்கவில்லை” யுவராஜ் சிங், நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“ஆனால், தோனி எனக்கு உண்மையான படத்தைக் காட்டினார், அவர் எனக்கு தெளிவுபடுத்தினார், அவர் தன்னால் முடிந்தவரை செய்தார்.”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.