ஆதிபுருஷ் விமர்சனத்தால் அலர்ட் ஆன 'ஹனு மேன்' டீம்

முன்பெல்லாம் புராணக் கதைகளை சினிமாவாக எடுத்தால் ரசித்துப் பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இன்று கதையை மாற்றி விட்டார்கள், கதாபாத்திரத்தை சிதைத்து விட்டார்கள், புராண கடவுள்களின் தோற்றத்தையே மாற்றி விட்டார்கள் என ஒவ்வொரு திசையில் இருந்தும் பலமான குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படமும் இந்த விமர்சனத்திற்கு தப்பவில்லை. குறிப்பாக ராமன், அனுமன், ராவணன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திர தோற்றங்கள் இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்ததற்கு மாறாக இருப்பதாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. படத்தின் வசனங்களும் கூட இந்த சர்ச்சைக்கு அதிக தீ ஊற்றின.

இந்த நிலையில் இன்னொரு புராண படமாக ராமாயண கதாபாத்திரமான அனுமனை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்பட்டு வரும் ஹனுமேன் என்கிற படக்குழுவினர் ஆதிபுருஷ் படத்திற்கு எழுந்த சர்ச்சைகள் காரணமாக உஷாராகி உள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் ஆதிபுருஷ் படத்திற்கு ஏற்பட்டது போன்ற எந்தவித சர்ச்சையும் தங்கள் படத்திற்கு வந்து விடக்கூடாது என கதையையும், கதாபாத்திரங்களையும் குறிப்பாக அனுமனின் தோற்றத்தையும் கனகச்சிதமாக உருவாக்கி வருகின்றனர்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.