தீப்பந்தத்துடன் கமல். மிரட்டலான வீடியோ..கமல்ஹாசன் – எச்.வினோத் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 233 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க கமல் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரது அடுத்தடுத்த படங்களை பல முன்னணி இயக்குனர்கள் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், எந்த தகவலும் உறுதி செய்யப்படாமலே இருந்தது.

உலகநாயகன் கமல்: கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாரம்பரிய நெல் பாதுகாப்பு உறுப்பினர்களை கமல் சந்தித்த போது, அவர்களுடன் இயக்குனர் வினோத்தும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகின. இதனால் கமல், எச். வினோத் கூட்டணி உறுதியாகிவிட்டதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவின.

இந்தியன் 2: கமல் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை முடிந்துவிட்டார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 233 படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல் 233 அதிரடி அறிவிப்பு: அதன்படி அ. வினோத் இப்படத்தை இயக்க படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் ஆள்வதற்காக எழுதல் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் (RISE to RULE) என்ற வாசகத்தை அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மேலும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது எனப் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிமுக வீடியோவை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கமல் கையில் தீப்பந்தத்துடன் வருகிறார். இந்த வீடியோவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து வெற்றி: சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எச். வினோத். தனது முதல் படத்திலே ரசிகர்களை கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச். வினோத், அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக மூன்று படங்களில் இணைந்து பணியாற்றினார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.