Ajit Agarkar has been selected as the head of the Indian cricket selection committee | இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவரானார் அஜித் அகார்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய அணி தேர்வுக்குழு தலைவராக அகார்கர் 45, நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக இருந்தவர் சேட்டன் சர்மா. சர்ச்சைக்குரிய முறையில் பேசி பதவியை பறிகொடுத்தார். நிரந்தர தலைவரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறங்கியது. இந்நிலையில், தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அகார்கர் தேர்வானார். இவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ. ஒரு கோடி தரப்படலாம்.

latest tamil news

பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில்,’ இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பி.சி.சி.ஐ., ஆலோசனைக்குழு நேர்காணல் நடத்தியது. முடிவில், தலைவராக அகார்கர் நியமிக்கப்பட்டார். விண்ணப்பித்த நபர்களில் அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற அடிப்படையில் தேர்வாகி உள்ளார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகார்கர் 191 ஒரு நாள் (288 விக்.,), 26 டெஸ்ட் (58), 4 ‘டி-20’ (3) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.