Anil Ambanis wife Tina appeared at the Enforcement Directorate | அனில் அம்பானி மனைவி டினா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

மும்பை: உலக பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி; ரிலையன்ஸ் ஏ.டி.ஏ., குழுத்தின் தலைவராக உள்ளார். யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதேபோல சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.814 கோடி வைத்து ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.

அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் (பெமா) பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (ஜூலை 3) அனில் அம்பானி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி இன்று, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.