Dhanush – தனுஷ் கேட்டு கிடைக்காத ரிமோட் கார்.. அவர் செய்த சம்பவத்தை பாருங்க

சென்னை: Dhanush (தனுஷ்) சிறு வயதில் தனுஷ் கேட்ட ரிமோட் கார் கிடைக்காததால் வளர்ந்த பிறகு அவர் செய்த தரமான சம்பவம் தெரியவந்திருக்கிறது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் அனைவரிடமிருந்தும் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற தனுஷ் தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருகிறார். எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும் நடிப்பில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார் தனுஷ். கடைசியாக அவர் நடிப்பில் வாத்தி படம் வெளியானது.

செல்வராகவனே துணை: முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாதான் முதலில் இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே தனது மூத்த மகனான செல்வராகவனின் கைகளில் துள்ளுவதோ இளமையையும், தனுஷையும் ஒப்படைத்தார் அவர். கஷ்டத்தில் இருக்கும் தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற் நோக்கத்தில் செல்வராகவனும், தனுஷும் அந்தப் படத்தில் உழைக்க படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

காதல் கொண்டேன்: முதல் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதும் நம்பிக்கை கொண்ட செல்வராகவன் இரண்டாவது படமாக காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் முதலில் தனுஷுக்கு பதிலாக பிரபுதேவாதான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் செல்வராகவன் சிறு வயதாக இருந்ததால் அவர் மேல் பிரபுதேவாவுக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. இதனையடுத்து காதல் கொண்டேன் பட ஹீரோவாக தனுஷையே கமிட்டாக்கினார் செல்வராகவன்.

உயரம்: காதலை அதுவரை எல்லோரும் மென்மையாகவே கையாண்டிருந்த நிலையில் தனுஷை வைத்து காதல் ப்ளஸ் த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கினார் செல்வா. காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பைப் பார்த்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு தனுஷ் தொட்டதெல்லாம் ஹிட்டானது. அவரும் சரசரவென்று உயரத்துக்கு சென்றார்.

கேப்டன் மில்லர்: தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு பிறகு தனது 50ஆவது படத்தை இயக்கி நடிக்கிறார் தனுஷ். அதேபோல் ஹிந்தி படம் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார். இப்படி பறந்து பறந்து நடித்துக்கொண்டிருகும் தனுஷ் சிறுவயதில் தனது தந்தையிடம் ஆசைப்பட்டு கேட்ட ரிமோட் கார் கிடைக்கவில்லை.

என்ன நடந்தது: கஸ்தூரி ராஜா இயக்குநராக இருந்தாலும் குடும்பம் நடுத்தர வர்க்க குடும்பம்தான். எனவே சிறு வயதில் தனுஷுக்கான ஆசைகளும், தேவைகளுக்கு அளவுக்குள்ளேதான் இருந்தன. அப்படி ஒருசமயத்தில் தனுஷ் பக்கத்து வீட்டில் இருந்த பையன் ஒருவன் ரிமோட் காரை வைத்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். அதைப் பார்த்த தனுஷ் அந்தப் பையனிடம் ஒரே ஒருமுறை ரிமோட் கொடு அழுத்தி பார்த்துவிட்டு தந்துவிடுகிறே என கூற; அதற்கு அந்த பையனோ மறுத்திருக்கிறார்.

சம்பவம் செய்த தனுஷ்: இதனையடுத்து தனது தந்தையிடம் வந்து ஒரு ரிமோட் கார் கேட்டிருக்கிறார் தனுஷ். ஆனால் அப்போது அது விலை உயர்ந்தது என்பதால் கஸ்தூரி ராஜா அதை கண்டுகொள்ளவில்லை. அப்போது ஒரு முடிவெடுத்தாராம் தனுஷ். அதாவது தான் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு உயர் ரகத்தில் ஒரு ஒரிஜினல் காரை வாங்க வேண்டுமென உறுதிபட்டிருக்கிறார்.

தனுஷும் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு உயர் ரகத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி தனது வீட்டின் ஷெட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார். ஒருமுறை தனுஷை பார்ப்பதற்காக சென்றபோது ஏன் சார் இந்த காரை யூஸ் பண்ணமாட்டீங்களா என செய்யாறு பாலு கேட்க; அதற்கு தனுஷோ, சிறுவயதில் நடந்த அந்த ரிமோட் கார் விஷயத்தை சொல்லி;

அப்போ எடுத்த முடிவு சார் இப்படி ஒரு கார் வாங்கணும்னு. அதான் வாங்கி நிறுத்தி வெச்சிருக்கேன். இந்தக் காரை இந்திய சாலைகளில் ஓட்டுவது கடினம். 500 மீட்டர் போறதுக்குள்ள 2 லிட்டர் பெட்ரோல காலி பண்ணிடும் என்றாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.