Maaveeran: 'மாவீரன்' படத்துக்கு நோ சொன்ன ரஜினி, கமல்: மெஹா ட்விஸ்ட் வைத்துள்ள படக்குழு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘மாவீரன்’ படம் உருவாகியுள்ளது. அண்மையில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே போல் ‘மாவீரன்’ பட டிரெய்லரும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற செய்துள்ளது. இந்நிலையில் ‘மாவீரன்’ படம் குறித்து மிஷ்கின் பகிர்ந்துள்ள ஒரு தகவல் தான் சோஷியல் மீடியா முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது.

டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வந்தது. இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், அண்மையில் ‘மாவீரன்’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இந்தப்படம் குறித்த தகவல் ஒன்று சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகிறது. அதாவது இந்தப்படம் குறித்து பேசிய இயக்குனர் மிஷ்கின், படத்தில் ஒரு முக்கியமான வாய்ஸ் உள்ளது. இதற்காக கமல் சாரை அணுகிய போது அவர் ரொம்ப பிசியா இருந்தாரு. ரஜினி சாரை முயற்சி பண்ணும் போது, அதுவும் முடியாம போய்ருச்சு. வேறு ஒரு ஆள் வாய்ஸ் கொடுத்திருக்காங்க. அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அது யாருடைய வாய்ஸ் என்பது பற்றி கூறவில்லை. இதனால் யார் வாய்ஸ் கொடுத்திருப்பர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தனுஷ் இந்த வாய்ஸ் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவை எதுவும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

Vijay Antony: புது அனுபவம்.. விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் முதல் விமர்சனம்.!

இந்நிலையில் ‘மாவீரன்’ படத்துக்கான சென்சாரும் நிறைவடைந்துள்ளது. அதன்படி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

‘மண்டேலா’ படத்தின் வெற்றியை மடோன் அஸ்வின் ‘மாவீரன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதிதி ஷங்கர், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ‘மாவீரன்’ படம் வரும் வரும் ஜுலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

KH 233: ‘கமல் 233’ படத்தின் கதை இதுதானா.?: தரமான சம்பவத்தை கையிலெடுத்துள்ள ஆண்டவர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.