தமன்னாவின் காவாலா வைப்… ஒரிஜினலை விட இது சூப்பர்… ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடலுக்கு வேறு விதமாக ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்ததே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படமான ஜெயிலர் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ்: ஜெயிலர் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம்10ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினிக்கு ஆகஸ்ட் மாதம் ராசியில்லாத மாதம் என்பதால், படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என பேச்சு எழுந்த நிலையில், படத்தின் மீதும், கதையின் மீதும் நம்பிக்கை வைத்து படம் படத்தை ஆகஸ்ட் மாதமே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

காவாலா முதல் சிங்கிள்: அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதிய ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது. துள்ளலான இசையுடன் தமன்னாவின் நடனமும், ரஜினியின் ஸ்டைல் ஆக்‌ஷனுடன் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் வெளியாகி யூடியூபில் டிரெண்டிங்காகி பட்டையை கிளப்பி வருகிறது.

தமன்னாவின் காவாலா வைப்: காவாலா பாடல் வெளியானதில் இருந்து, சோஷியல் மீடியா பக்கம் திரும்பினாலே ‘காவாலா’ வைப்பாக இருந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த பாடலுக்கு நடனமாடிய ஓரிஜினல் நாயகி தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை வளைத்து நெளித்து சும்மா வேறலெவலில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அந்த ஆட்டத்தை விட இந்த ஆட்டம் சும்மா தரமா இருக்கு என்று கருத்துக்கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.