Maamannan: என் படத்தை முழுசா கூட பார்க்கல..பாதியிலேயே போய்ட்டாங்க..வெளிப்படையாக பேசிய உதயநிதி..!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என ஆல்ரவுண்டராக கலக்கி வந்தவர் தான்
உதயநிதி
. மேலும் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த உதயநிதி தற்போது அமைச்சராகவும் பொருப்பெற்றுள்ளார். எனவே முழு நேர அரசியலில் களமிறங்க உதயநிதி நடிப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தார்.

இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான மாமன்னன் திரைப்படம் தான் அவரது கடைசி படமாகும். மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

உதயநிதியின் மாமன்னன்

உதயநிதியின் திரைவாழ்க்கையிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக மாமன்னன் மாறியுள்ளது. இந்த வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் இதுபோன்ற ஒரு படத்தில் உதயநிதி நடித்ததற்காக அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Maaveeran: மாவீரன் படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ் இதுதான்..க்ளூ கொடுத்த மிஸ்கின்..!

இந்நிலையில் மாமன்னன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஓப்பனாக பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மாமன்னன் படத்தை பற்றியும், மாரி செல்வராஜை பற்றியும் பல விஷயங்களை ஜாலியாக பேசிய உதயநிதி தான் நடித்த ஒரு படத்தை பயங்கரமாக கலாய்த்து கொண்டார்.

அதாவது அவர் நடிப்பில் வெளியான ஒரு படத்தை தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போட்டு காண்பித்துள்ளார் உதயநிதி. அந்த படத்தை பார்த்துவிட்டு பாதியிலேயே உதயநிதியின் தங்கை வீட்டிற்கு கிளம்பிவிட்டாராம். உடனே உதயநிதி அவரின் தங்கைக்கு போன் செய்து, ஏன் பாதியிலேயே போய்ட்டிங்க என கேட்க, இது ஒரு படம்னு எங்களை அதை பார்க்க வேற சொல்லிருக்க என உதயநிதியை கலாய்த்தாராம் அவரின் தங்கை.

வெற்றிநடை

இதை உதயநிதி வெளிப்படையாக ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதி அந்த படத்தின் பெயரை கூறமாட்டேன் என சொன்னாலும் ரசிகர்கள் அது என்ன படம் என கண்டுபிடித்து விட்டனர். மேலும் அப்படம் என்னதான் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது என கூறினார் உதயநிதி.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து அப்படத்தை இயக்குனர் எழில் தான் இயக்கினார் எனவும், அதில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது எனவும் கூறினார் உதயநிதி. இந்நிலையில் இதற்கு உதயநிதி அந்த படத்தின் பெயரையே சொல்லியிருக்கலாமே என ரசிகர்கள் கமன்ட் அடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.