"சவாலா விடுற சவாலு".. அடுத்த ரெய்டு உனக்கு தான்.. இரு மகனே.. உதயநிதி ஸ்டாலினை மிரட்டிய வளர்மதி

சென்னை:
அமலாக்கத்துறையை தனது வீட்டுக்கு ரெய்டு வரச் சொல்லி அமைச்சர்

சவால் விடுத்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி அதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமலாக்கத்துறையால் திமுக அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை கட்டம் கட்டியுள்ளது.

அவருக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே, அடுத்த ரெய்டு உதயநிதி ஸ்டாலின் வீட்டில்தான் என பாஜக தலைவர்கள் பலர் கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய உதயநிதி ஸ்டாலின், “அமலாக்கத்துறையை பார்த்து பயப்படும் ஆளா நான். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். வேண்டுமென்றால் எனது முகவரியை கூட தருகிறேன். என் வீட்டில் ரெய்டு நடத்து பார்க்கலாம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், உதயநிதி இவ்வாறு பேசியதை அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக நேற்று நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மோடியை பார்த்தும் பயப்பட மாட்டேன்.. ஈடியை பார்த்தும் பயப்பட மாட்டேன்.. உதயநிதி ஸ்டாலின் வெறித்தனம்

கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பையன் உதயநிதி வந்து பேசுறாரு. என்ன பேசுறாரு தெரியுமா? நான் மோடிக்கும் பயப்பட மாட்டேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்னு பேசுறாரு. அப்புறம் சொல்றாரு, “நான் யாரு தெரியுமா.. கருணாநிதியின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய பிள்ளை. நான் எதற்கும் பயப்பட மாட்டேன். ரெய்டு வந்தா வரட்டும். நான் அட்ரஸ் தர்ரேன்” அப்படினு பேசி இருக்காரு. இரு மகனே.. அடுத்த ரெய்டு உன் வீட்டுக்கு தான். சவாலா விடுற சவாலு.

சவால் விடுறியா? அரசியல் தெரியுமா உனக்கு? இப்போ அரசியலுக்கு வந்துட்டு அவர் சவால் விடுறாரு. செந்தில் பாலாஜிக்கு இலாகா இல்லாத மந்திரி கொடுத்து, ஜெயில்ல ஏ கிளாஸ் கொடுத்து, சப்பாத்தி கொடுத்து, கோழிக்கறி கொடுத்து, உப்புமா கொடுத்து அவரை ஜெயிலில் உட்கார வெச்சிருக்கீங்க. உங்க கையில பவர் இருக்குற காரணத்தால் இத்தனையும் கொடுத்து செந்தில் பாலாஜியை பார்த்துக்குறீங்க. ஆனால் உனக்கு (உதயநிதி ஸ்டாலின்) என்ன நிலைமை வரும்னு யோசிச்சு பாரு. உனக்கு தமிழ்நாடு ஜெயில் கிடையாது. டெல்லியில் தான். அங்க உங்க ஆட்டம் செல்லுபடியாகாது. அங்க ஒன்னும் நடக்காது.

சீக்கிரம் வந்துருவாங்க அமலாக்கத்துறை. கவலைப்படாதே. உன்ட்ட அத்தனை கதை இருக்கு. 30 ஆயிரம் கோடி கதை இருக்கு, டாஸ்மாக் பாட்டில் கதை இருக்கு, கலப்பட கதை இருக்கு, 10 ரூபா கதை இருக்கு. காலைல 6 மணி கதை இருக்கு. எல்லா கதையும் வெளில வரப்போகுது. வந்துச்சுனா சந்தி சிரிச்சிரும். இவ்வாறு வளர்மதி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.