Ola S1 Air: ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்

ஓலா எலக்ட்ரிக் மின்சார வாகன தயாரிப்பாளரின் குறைந்த விலை பெற்ற எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, பயணிக்கின்ற ரேஞ்சு, நுட்பவிபரங்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Ola S1 Air

இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் நிலையில் பட்ஜெட் விலை மாடலாக  அறிமுகம் செய்துள்ள எஸ் 1 ஏர் பேட்டரி மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள மின்சார ஹப் வகை மோட்டாரிலிருந்து 2700 W தொடர்ந்து வெளிப்படுத்தும், அதிகபட்சமாக 4500 W பவர் வரை வெளிப்படுத்துகின்றது.

எஸ் 1 ஏர் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 3Kwh லித்தியம் பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 5 மணி நேரம் வரை தேவைப்படும்.  750 kW போர்டெபிள் சார்ஜ் ஆனது வழங்கப்படுகின்றது. முழுமையாக சார்ஜ் செய்தால் IDC முறைப்படி 125 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில் வழங்கலாம்.

எஸ் 1 ஏர் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 90Km/hr ஆகும்.

டியூப்லெர் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, ஸ்டீல் வீல் பெற்ற இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக்குடன், S1 Air இரண்டு சக்கரங்களின் 90/90-12 பெற்று ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது.

எஸ் 1 புரோ போல காட்சியளித்தாலும், விலை குறைப்பிற்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுன. இந்த மாடலில் இரட்டை புரொஜெக்டர் ஹெட்லேம்ப், வளைவான பாடி பேனல்கள், ஒற்றை இருக்கை மற்ற மாடல்களை போலல்லாமல், ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தட்டையான ஃபுட் போர்டை பெறுவதனால், சிறிது கூடுதல் சேமிப்பிடத்தை வழங்குவதால் பயன்பாட்டினை அதிகரிக்க முடியும்.

7 அங்குல TFT திரை பெற்றுள்ள எஸ் 1 ஏர் ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன் மூலம் இணைப்பு, ரைடிங் முறைகள், ரிவர்ஸ் மோட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், OTA புதுப்பிப்பு, மியூசிக் பிளேபேக், ரிமோட் பூட் லாக்/திறத்தல், நேவிகேஷன் மற்றும் முன்கூட்டியே பராமரிப்பு பற்றி அறிவிப்புகள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஓலா எஸ் 1 ஏர் ஸ்கூட்டரின் பரிமாணங்கள் 1865 மிமீ நீளம், 710 மிமீ அகலம் மற்றும் 1155 மிமீ உயரம் கொண்டுள்ளது. 1385 மிமீ வீல்பேஸ், 792 மிமீ இருக்கை நீளம், 738 மிமீ இருக்கை உயரம், 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்ட ஸ்கூட்டரின் கெர்ப் எடை 107 கிலோ மற்றும் பூட் கொள்ளளவு 34 லிட்டர் ஆகும்.

இந்த மாடலில்  பீங்கான் வெள்ளை, நியோ மின்ட், கோரல் கிளாம், மற்றும் லிக்விட் சில்வர் என நான்கு நிறங்களை பெற்றதாக வந்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 3 ஆண்டு பேட்டரி + மோட்டார் உத்தரவாதம் வழங்குகிறது.

OLA S1 Air ஸ்கூட்டரின் 3Kwh எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 1,19,999

s1 air electric price

ஓலா S1 Air நுட்பவிபரங்கள்

மோட்டார்
வகை ஏலக்ட்ரிக்
மோட்டார் வகை Hub மோட்டார்
பேட்டரி 3 Kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 90 Km/h
அதிகபட்ச பவர் 2.7 KW Nominal/ 4.5 kw Peak
அதிகபட்ச டார்க் 58 Nm
அதிகபட்ச ரேஞ்சு 125Km/ charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 5 மணி நேரம் (0-100%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டியூப்லெர்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Eco, Normal & Sports
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் டூயல் ஷாக்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm
பின்புறம் டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை ஸ்டீல்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/90-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 750 kW
கிளஸ்ட்டர் 7 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 1865 mm
அகலம் 710 mm
உயரம் 1155 mm
வீல்பேஸ் 1359 mm
இருக்கை உயரம் 792 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
பூட் கொள்ளளவு 34 Litre
எடை (Kerb) 107 kg

ஓலா எஸ்1 ஏர் நிறங்கள்

4 விதமான நிறங்களை பெற்றதாக எஸ்1 ஏர் ஸ்கூட்டர் கிடைக்கின்றது.

 

Ola S1 Air EScooter on-road Price in TamilNadu

2023 ஓலா எஸ்1 ஏர் மின்சார ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும்  பொருந்தும். ஆன்-ரோடு விலை தோராயமானது மாறுதலுக்கு உட்பட்டது

OLA S1 Air 3Kwh –  1,32,457

Ola S1 Air EV Rivals

குறைந்த விலை ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் ஐக்யூப், வரவிருக்கும் ஏதெர் 450 எஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் உள்ளன.

Faqs about Ola S1 Air

ஓலா S1 Air பவர் மற்றும் டார்க் விபரம் ?

3 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரியுடன் ஹப் வகை மோட்டாரிலிருந்து 2700 W தொடர்ந்து வெளிப்படுத்தும், அதிகபட்சமாக 4500 W பவர் வரையும், 58 NM டார்க் வெளிப்படுத்தும்

ஓலா S1 Air ரேஞ்சு எவ்வளவு ?

முழுமையான சிங்கிள் சார்ஜில் 125 கிமீ வரை ரேஞ்சு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 90-100 கிமீ கிடைக்கலாம்.

ஓலா S1 Air ஆன்-ரோடு விலை எவ்வள்வு ?

OLA S1 Air 3Kwh ஆன்-ரோடு விலை 1,32,457 

ஓலா S1 Air போட்டியாளர்கள் யார் ?

ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் ஐக்யூப், வரவிருக்கும் ஏதெர் 450 எஸ் உள்ளன.

ஓலா S1 Air ஸ்கூட்டர் சிறப்பானதா ?

100 கிமீ ரேஞ்சு நிகழ் நேரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பட்ஜெட் விலை மாடலாக உள்ளது.

ஓலா எஸ் 1 ஏர் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு ?

எஸ் 1 ஏர் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 90 Km/hr

s1 air சார்ஜிங் நேரம் எவ்வள்வு ?

ஓலா எஸ் 1 ஏர் ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 5 மணி நேரம் ஆகும்

S1 Air EScooter Photos Gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.