Paytm வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி? ஈஸியான வழிமுறை

நீண்ட தூரம் அல்லது குறிப்பிட்ட ஊர்களுக்கு ரயில் மூலம் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற கவலையில் இருந்தால் தட்கல் வழியாக முன்பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது. அதுவும் Paytm கணக்கு வழியாகவே நீங்கள் தட்கல் முறையில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடலாம். 

IRCTC-ல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி? இதோ வழிமுறை

Paytm கணக்கு

உங்கள் மொபைல் எண்ணுடன் உங்கள் Paytm கணக்கில் லாகின் செய்ய வேண்டும். அதன்பிறகு அங்கு இருக்கும் டிக்கெட் புக்கிங் என்ற ஆப்சனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு நேரம் தொடங்கிய 30 நிமிடங்களுக்குப் பிறகு தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய Paytm உங்களை அனுமதிக்கிறது. அதாவது 10:30AM ஏசி வகுப்புகளுக்கும், AC அல்லாத வகுப்பிற்கு 11:30AM மணிக்கும் தட்கல் முன்பதிவு செய்யலாம்.

ரயில் விவரங்கள்

பேடிஎம் கணக்கில் உள்நுழைந்த பிறகு, நீங்கள் ரயிலில் ஏறும் இடத்தையும், செல்ல இருக்கும் இடத்தையும் அதாவது இறங்கும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். இங்கு நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தட்கல் முன்பதிவு ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கும் முன்பாக மட்டுமே செய்ய முடியும். இதனால், தட்கல் தேதியில் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.  தட்கல் முன்பதிவு செய்யும் தேதியின்போது எந்த ரயிலுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்பதையும் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், முன்பதிவின்போது தட்கல் என்ற ஆப்சனையும் கிளிக் செய்து டிக்கெட்டுக்கு அப்ளை செய்ய வேண்டும்.

பயணிகள் விவரம்

டிக்கெட் முன்பதிவில் பயணிகள் தொடர்பாக கேட்கும் விவரங்களை நீங்கள் பதிவிட வேண்டும். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வது அவசியம். ஒரே டிக்கெட்டில் ஆறு பயணிகள் வரை Paytm மூலம் முன்பதிவு செய்யலாம். உங்கள் மொபைல் எண்/மின்னஞ்சலுக்கு உங்கள் தட்கல் டிக்கெட்டின் மின்-டிக்கெட் நகலைப் பெற, உங்கள் சரியான மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும்.

ஆன்லைனில் பணம் செலுத்துதல் 

அனைத்து விவரங்களையும் நீங்கள் பதவிட்ட பிறகு “புக் டு புக்” என்பதைத் தொடர்ந்து கிளிக் செய்து, பணம் செலுத்துவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் தட்கல் டிக்கெட்டை உறுதிப்படுத்த Paytm வாலட் மூலம் பணம் செலுத்தவும் அல்லது UPI ஐடிக்கள், ப்ரீபெய்ட் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் வழியாக பணம் செலுத்தலாம்.

PNR உறுதிப்படுத்தல் கணிப்பு

காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன்பே உங்கள் டிக்கெட் உறுதிப்படுத்தலைக் கணிக்க Paytm ஒரு அருமையான வழியைக் கொண்டுள்ளது. Paytm க்கு பிரத்தியேகமான “உறுதிப்படுத்தல் முன்கணிப்பு அம்சம்” மூலம், இப்போது நீங்கள் ரயில் டிக்கெட்டுகளைத் தேடும்போது உங்கள் டிக்கெட் உறுதிப்படுத்தலுக்கான வாய்ப்புகளைப் பார்க்கலாம். இது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. இந்த அம்சம் டிக்கெட் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்புள்ள குறிப்பிட்ட ரயிலைத் தேர்வு செய்யவும் உதவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.