அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளை வரவழைப்பதற்குத் திட்டம்

மருந்துப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளைக் நாட்டிற்கு வரவழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக (26) ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க இது குறித்து ஊடகவியளாலர்களுடனான விசேட சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்காக சாதாரணமாக 6 மாத காலம் எடுக்கும் எனவும் அவசர கொள்வனவை நடைமுறைப்படுத்தியதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

இம்மருந்துத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யக்கூடியதாகக் காணப்படும் எனவும் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

புற்று நோய்க்காக அவசியமான 65 மருந்துகள் தற்போது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய பொருளாதார நிலைமைக்கு இணங்க சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகள் மாத்திரம் வரவழைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பொருளாதார சிக்கல் இந்நிலை ஏற்படுவதற்கு பிரதானமாக செல்வாக்குச் செலுத்துவதாகவும் மேலதிக செயலாளர் விபரித்தார்.

இதுவரை 350 வகை மருந்துகளளவில் உள்நாட்டு உற்பத்தியாளர்களினால் சுகாதார அமைச்சிற்கு பெற்றுத்தருவதாகவும் சுட்டிக்காட்டிய வைத்தியர் சமன் ரத்நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வருட இறுதியாகும் போது மேலும் சுமார் 100 வகை மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஓவ்வொரு வருடமும் தரமற்ற (Quality failure)மருந்துகள் 80 அல்லது 100 அளவில் காணப்படுவதுடன், உலகில் ஏனைய நாடுளிலும் இவ்வாறான நிலை ஏற்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.