Court refuses to stay case against Kejriwal | கெஜ்ரிவால் மீதான வழக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு

ஆமதாபாத்:பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு தடை விதிக்க, குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், அந்த கட்சியின் முக்கிய தலைவருமான சஞ்சய் சிங்கும், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து அவதுாறாக பேசியதாக, குஜராத் பல்கலை சார்பில், இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு முறையாக ஆஜராவதாக, கெஜ்ரிவால் ஏற்கனவே நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளதையும் நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.