New Bill on Election Commissioner Appointment: No Violation: Union Minister Interview | தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய மசோதா: எந்த விதிமீறலும் இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய மசோதாவில், எந்த விதி மீறலும் இல்லை என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் கூறினார்.

latest tamil news

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை, ராஜ்யசபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதன் படி, ‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், கேபினெட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவே தேர்வு செய்யும்’ எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

விதிமீறல் இல்லை

இது குறித்து, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் கூறியதாவது: பார்லிமென்டில் சட்டம் இயற்றும் வரை, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை, மூன்று பேர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

latest tamil news

தற்போது, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், விதிமீறல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.