Vannarapettayila: "நான் பாடிய பாடலை அதிதியைப் பாட வைத்து ரிலீஸ் பண்ணிட்டாங்க!" – மீனாட்சி இளையராஜா

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சுனில், மிஷ்கின் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் `மாவீரன்’. இத்திரைப்படம் தற்போது OTT தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது

இதில் இடம்பெற்ற ‘வண்ணாரப் பேட்டையில…’ பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் இணைந்து பாடிய இப்பாடலை ஜாலியான வீடியோவாகவும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இது யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என வைரலானது.

‘வண்ணாரப் பேட்டையில’ பாடலில்…

இப்பாடலுக்கு முதலில் தேர்வான பின்னணிப் பாடகி மீனாட்சி இளையராஜா. இவர் சமீபத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ , ‘குட் நைட்’ போன்ற படங்களுக்கும் பாடியவர். இதேபோல ‘விருமன்’ படத்தில் இடம்பெற்ற ‘மதுரை வீரன்’ பாடலை முதலில் பாடியவர் ராஜலட்சுமி. ஆனால், அது படத்தில் இடம்பெறவில்லை. பிறகு, அப்பாடலை அதிதி சங்கர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீனாட்சி இளையராஜாவிடம் பேசினோம்.

“‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தில் ஷான் ரோல்டன் இசையில் “கோட்டிக்கார பயலே” என்று ஒரு பாடல் பாடியிருந்தேன். அதைக் கேட்டு இசையமைப்பாளர் பரத் ஷங்கர் என்னை ‘மாவீரன்’ படத்தில் ‘வண்ணாரப்பேட்டையில…’ பாடல் பாடும்படி கேட்டிருந்தார்.

‘மாவீரன்’ படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது புதுமையான அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் பரத் ஷங்கர் என் குரல் வளத்தை வெகுவாகப் பாராட்டினார்.

இருப்பினும் படத்தில் நான் பாடியது இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக அதிதி ஷங்கரைப் பாடவைத்து வெளியிட்டார்கள்.

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர் நன்றாகவே பாடி இருந்தார். இருப்பினும் நான் பாடியது இடம்பெறவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. 15 வருடப் போராட்டத்திற்குப் பிறகு ‘MGR மகன்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘குட் நைட்’ போன்ற படங்களில் பாடி, படிப்படியாக வளர்ந்து வருகிறேன்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நல்ல பேனரில் பாடும் வாய்ப்பு கிடைத்தும், அது படத்தில் இடம்பெறவில்லை. நிச்சயம் இப்படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நினைத்தேன். அதிதி ஷங்கர் அளவிற்குத் திறமையாக நாம் பாடவில்லை போல என்று நினைத்து என்னை நானே தேற்றிக் கொள்வேன். இன்றும் அந்தப் பாடலைக் கேட்கும் போது அழுகை வரும். அநக்ச் சமயத்தில் ‘இதைவிடப் பல மடங்கு பெரிதாக ஒரு வாய்ப்பு உனக்குக் காத்திருக்கிறது’ என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்!” என நம்பிக்கையாகப் பேசினார் மீனாட்சி இளையராஜா.

பாடகர் மீனாட்சி இளையராஜாவின் முழுப்பேட்டியைக் காண, இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.