சமந்தாவா ? நயன்தாராவா ? தளபதி 68 ஹீரோயின் யார் ? முதல்முறையாக வாய்திறந்த வெங்கட் பிரபு..!

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கின்றார். கோலிவுட்டின் புது கூட்டணியாக இது இருப்பதால் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் விஜய்யை காண ரசிகர்கள் அவளாக இருக்கின்றனர். பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியாக செம பொழுதுபோக்கு படமாக இருக்கும். குறிப்பாக அவரின் படத்தில் ஏதேனும் ஒரு புது விஷயத்தை வெங்கட் பிரபு முயற்சிப்பார். மங்காத்தா படத்தில் அஜித்தை வில்லனாக காட்டியது முதல் மாநாடு படத்தின் திரைக்கதை வரி அனைத்திலும் புதுமையை கொண்டுவந்தவர் தான் வெங்கட் பிரபு.

தளபதி 68 ஹீரோயின்

அந்த வகையில் விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்றவுடன், ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தை தான் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் தளபதி 68 படத்தின் அறிவிப்பை மே மாதமே படக்குழு வெளியிட்டது. லியோ படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே தளபதி 68 அறிவிப்பை வெளியிட்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

அப்பா எப்போ வீட்டிற்கு வருவீங்க ? கியூட்டாக கேட்ட மகள்..ஸ்வீட்டாக பேசிய விஜய்..வீடியோ உள்ளே..!

ஆனால் அது வெங்கட் பிரபுவிற்கு தான் சற்று தலைவலியாக மாறிவிட்டது எனலாம். காரணம், அவர் எங்கு சென்றாலும் தளபதி 68 படத்தை பற்றி தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அவரால் லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 பற்றி பேசமுடியாது என்பதால் அனைவரின் கேள்விகளையும் தவிர்த்து வருகின்றார். இருந்தாலும் அவர் போகும் இடமெல்லாம் தளபதி 68 படத்தை பற்றித்தான் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் அடியே படத்தின் விழாவிற்கு சென்றிருந்த வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 படத்தை பற்றி ஒருசிலர் கேள்வி கேட்டனர். இப்படத்தில் சமந்தா நாயகியா ? இல்லை நயன்தாராவா ? இல்லை கீர்த்தி சுரேஷா என அவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, இவர்கள் மூவரும் இல்லை என சொல்லிவிட்டார். அதைத்தொடர்ந்து அப்போ தளபதி 68 படத்தில் யாரேனும் புதுமுகங்கள் நாயகியாக நடிப்பார்களா என்ற கேள்விக்கும் நோ என்றார் வெங்கட் பிரபு.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து ரசிகர்களின் ஆர்வம் தனக்கு புரிகின்றது, இருந்தாலும் லியோ படம் வெளியான பிறகு தான் தளபதி 68 படத்தை பற்றிய அறிவிப்புகளை வெளியிடமுடியும். அப்படி வெளியிட்டால் தான் அது சரியாக இருக்கும் என கூறினார் வெங்கட் பிரபு. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் வெங்கட் பிரபு தற்போது சொன்ன தகவலை வைத்து கண்டிப்பாக இப்படத்தில் ஜோதிகா தான் நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தாட்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.