"பத்து நாளுக்கு முன்னாடி ஹீரோயின்ன மாத்தினோம், காரணம்…" : அடியே பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான், வெங்கட் பிரபு, மதும்கேஷ் உள்ளியிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் அடியே. இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் என்னும் புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

அடியே படத்தின் போஸ்டர்

பேரலல் யூனிவெர்ஸ் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். படத்தை பற்றி பேசிய படத்தின் தயாரிப்பு நிறுவன தலைவர் மகேந்திர பிரபு,”இந்த படம் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போதே அவ்வளவு அழகாக இருந்தது, அதை படமாக்கினால் இன்னும் அழகாக இருக்கும் என்பதால் இந்த படத்தை செய்துள்ளோம். நினைத்தது போலவே மிகவும் அழகாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்” என கூறினார்.

அடியே படத்தின் நாயகன் ஜிவி

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மட்டுமல்லாமல், அனைவருமே இரண்டு உலகில் பயணிப்பதுபோல் கதை அமைந்திருக்கும். மேலும், விஜயகாந்த் பிரதமராக இருப்பது,சென்னையில் பனிமழை, நிறுத்தப்பட்ட விஜயின் யோகன் படம் வெளியாகி வெற்றிக்காண்பது போன்ற சுவாரசியமான விஷயங்களை படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு தேவையான அனைத்தையும் அளவிற்கு அதிகமாக கவனித்து செய்ததாகவும் இயக்குனர் தெரிவித்தார். பத்திரிகையாளர், படத்தின் பெயருக்கு எதிர்ப்பு வரவில்லையா என கேட்க, கதாநாயகி கௌரியே “ஏன் இப்படி ஒரு பெயர், வேண்டாமே” என கூறியதாக இயக்குனர் கூறினார். அதற்கு “இல்லீங்க.. கோபத்திலோ, திட்டும் போதோ செல்லும் அடியே அல்ல அது.. அப்படி அழைப்பது பிடிப்பதும் பிடிக்காததும் அந்த பெண் சம்மந்தப்பட்டது தான். அவன் அவளை காதலிக்கிறான், அந்த முறையில் அவன், அவளை அடியேனு கூப்பிடும் தோணியே அது” என பதிலளித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

அடியே படத்தின் நாயகி கௌரி கிஷான்

படத்தின் பேச்சுவார்த்தை முடிந்து படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இயக்குனருக்கு கதாநாயகியை மாற்றவேண்டும் என தோன்றியதாம், தயாரிப்பாளர்களும் சரி எனக் கூற, கௌரி கிஷானிடம் பேச்சுவார்த்தை நடத்தி இவரையே கதாநாயகியாக வைத்துள்ளனர்.

இது குறித்த கேள்விக்கு, “அந்த கதாநாயகியும் நல்ல நடிகைதான், அவரும் ஜிவியும் ஜோடியாக பார்க்க சரியாக இல்லை, எனவே தான் மாற்றினோம், அவரும் நல்ல நடிகை தான், கதாநாயகியை மாற்றியது முழுக்க முழுக்க இயக்குநராகிய என்னுடைய முடிவுதானே தவிர, ஜிவிகும் இதற்கும் சம்மந்தமில்லை” என பதிலளித்தார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

கிங் ஆஃப் கோதா படத்தில் துல்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ??

அடியே படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், பேரலல் யூனிவெர்சில் நடக்கும் இந்த காதல் கதை வரும் ஆகஸ்ட் 25 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வித்தியாசமான முயற்சிக்கு படம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.