'நான் மகான் அல்ல' படத்தை மிஸ் பண்ணிய பிரபல நடிகர்: 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை.!

கார்த்தி நடிப்பில் வெளியாகி செம்ம ஹிட் அடித்த படம் ‘நான் மகான் அல்ல’. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை அள்ளிய இந்தப்படம், விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை குவிந்தது. அந்தளவிற்கு இந்தப்படத்தை தரமாக இயக்கி இருப்பார் சுசீந்திரன். இந்நிலையில் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது குறித்து பிரபல நடிகர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்தி, காஜல் அகர்வால், சூரி, விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘நான் மகான் அல்ல’. கமர்ஷியல் படமான இதில் போதை பொருளால் இளம் வயதினர் தடம் மாறி போவதை பற்றியும் பேசியிருப்பார் இயக்குனர் சுசீந்திரன். அத்துடன் கார்த்தியின் சினிமா கெரியரிலும் இந்தப்படம் முக்கியமான படமாக ரசிகர்களிடையே செம்மையாக வரவேற்பை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ‘நான் மகான் அல்ல’ படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், அந்தப்படம் குறித்து பலரும் சோஷியல் மீடியாவில் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் இணையத்தில் வைரலான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, ‘இப்படம் எனக்கு பிடித்தமான படங்களில் ஒன்று.

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சுசீந்திரனுடன் இணைந்து இந்தப்படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. எல்லாமே இறுதியாக நிலையில் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. விதி வேறொரு திட்டத்தை வைத்திருந்தது. ‘நான் மகான் அல்ல’ என்னுடைய இரண்டாவது படமாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று அவ்வப்போது யோசித்து பார்ப்பேன் என பதிவிட்டுள்ளார்.

Dhanush: எனக்கும் ஆசைதான், ஆனா.. ‘D50’ படம் குறித்து உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்.!

அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டீங்க. ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் கார்த்தியை தவிர யாரையும் நினைச்சு பார்க்க முடியவில்லை கூறி வருகின்றனர். மேலும் சிலரோ, ஸ்கிரிப்ட் செலக்ட் பண்றதுல உங்களை அடிச்சுக்க முடியாது. நிறைய வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிச்சுட்டு வர்றீங்க. அதுனால பீல் பண்ண வேண்டாம் எனவும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால் தற்போது ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் விக்ராந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Karthi: ’96’ பட இயக்குனரின் புதிய படம்.. இணையும் கார்த்தி – அரவிந்த் சாமி: வெளியான சூப்பர் தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.