National Film Awards: அல்லு அர்ஜுன், கடைசி விவசாயி, 69வது தேசிய திரைப்பட விருதுகள் முழுப் பட்டியல்!

69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. இதற்கான் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

தேசிய திரைப்பட விருதுகளுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. 1954 முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

போட்டியில் இருக்கும் திரைப்படங்கள்

இந்த ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளின் போட்டியில் ஜெய்பீம், சர்ப்பட்டா பரம்பரை, கர்ணன், ஆர்,ஆர்,ஆர், கங்குபாய் கத்யாவாடி, தி காஷ்மீர் பைல்ஸ், மின்னல்முரளி, தி கிரேட் இண்டியன் கிச்சன் உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் போட்டியில் இடம்பெற்றிருந்தன.

கேதன் மேத்தா (Feature films category), வசந்த் சாய் (non feature films category), நீரஜா சேகர், யதேந்திர மிஸ்ரா, நானு பாசின் ஆகியோர் இதற்கு ஜூரிகளாக இடம்பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழுப்பட்டியல் இதோ…

அல்லு அர்ஜூன், ஆலியா பட்

விருதுகள்

சிறந்த நடிகர் – அல்லு அர்ஜூன் (புஷ்பா)

சிறந்த நடிகை – ஆலியா பட் (கங்குபாய் கத்யாவாடி)

சிறந்த படம் – ‘ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்’ (ஆர். மாதவன்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் – ஆர்.ஆர்.ஆர் (ராஜமெளலி)

சிறந்த துணை நடிகர் – பங்கஜ் திரிபாதி – (‘மிமி Mimi (இந்தி)’)

சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோஷி -( தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி))

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது – தி காஷ்மீர் பைல்ஸ்

சிறந்த குழந்தைகள் திரைப்படம் – காந்தி&கோ (குஜராத்தி)

சிறப்பு ஜூரி விருது – ‘Shershaah’ (இயக்குநர் விஷ்ணுவர்தன்)

சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது – மேப்பாடியான்

கடைசி விவசாயி

Feature Flims

நல்லாண்டி- கடைசி விவசாயி (தமிழ்)

இந்திரன்ஸ் – ‘Home’ (மலையாளம்)

சிறந்த ரீஜனல் திரைப்படங்கள்

சிறந்த தமிழ் திரைப்படம் – கடைசி விவசாயி (மணிகன்டன்)

சிறந்த குஜராத்தித் திரைப்படம் – Last Film Show (சல்லோ ஷோ)

சிறந்த கன்னட திரைப்படம் – ‘777 சார்லி’

சிறந்த மலையாள திரைப்படம் – ‘Home’ (ரோஜின் பி.தாமஸ்)

சிறந்த இந்தி திரைப்படம் – ‘சர்தார் உதம்’ (சுஜித் சிர்கார்)

டெக்னிகல் விருதுகள்

சிறந்த பாடல் இசைக்கான விருது – தேவிஶ்ரீ பிரசாத் ( ‘புஷ்பா’ )

சிறந்த பின்னணி இசை – கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)

சிறந்த பின்னணி இசை பாடகி – ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்- மாயவா சாயவா)

சிறந்த ஒளிப்பதிவு – அவிக் முகோபாத்யாய் (சர்தார் உதம்)

சிறந்த படத்தொகுப்பு – சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்யாவாடி)

Non – Feature Flims

சிறந்த கல்வித் திரைப்படம் – ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ (இயக்குநர் லெனின்

சிறந்த இசையமைப்பாளர் – ‘கருவறை’ – குறும்படம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.