மணிப்பூர் வன்முறை வழக்குகள்: அசாமுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்| Manipur violence cases: transferred to Assam by Supreme Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ., விசாரித்து வரும் வழக்குகளை, அதன் அண்டை மாநிலமான அசாமுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளை நியமிக்கும்படி, குவஹாத்தி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், மே 3ம் தேதி முதல், இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில், 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை மீண்டும் மீட்டெடுக்க, மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

.

latest tamil news

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தன. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:மணிப்பூர் வன்முறை குறித்து சி.பி.ஐ., விசாரித்து வரும் வழக்குகள் அனைத்தும் அசாமுக்கு மாற்றப்படுகின்றன.

இந்த வழக்குகளை விசாரிக்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளை, குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்.வழக்குகள் தொடர்பாக மணிப்பூரில் இருந்தபடி, ஆன்லைன் வாயிலாக குவஹாத்தி நீதிமன்றத்தில் மேற்கொள்ளலாம். இதற்கு, இணைய வசதியை மணிப்பூர் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அமர்வு

உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.