அண்ணாமலை தலைமையில் பாஜக கூட்டம் | இந்தியாவை சைக்கிளில் வலம்வரும் 56 வயது இளைஞர் – News in Photos

தூத்துக்குடியில் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து.
விழுப்புரத்தில்
மத்திய அரசின் சட்ட மசோதாவைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி:

ஊட்டியில் சுமார் இருபது நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக, நகராட்சி சந்தையின் ஒரு பகுதியில் குளம்போல மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, பாதாளச்சாக்கடை வசதியை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.

கிருஷ்ண ஜயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் விற்பனைக்காக வந்திருக்கும் வண்ணமயமான கிருஷ்ணர் மற்றும் விநாயகர் சிலை கொலு பொம்மைகள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண்தான இரு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர்:

70, 80 காலங்களின் திரைப்பட விளம்பரங்களை நினைவூட்டிய ஜூஸ் கடை விளம்பர வண்டி.

கடலூர்,
ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
பசுமையான இந்தியாவை உருவாக்க இந்தியாவை
மூன்றாவது முறையாக சைக்கிளில் சுற்றி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த 56 வயது இளைஞர் பரிமல் காஞ்சி.
மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.
குதிரன் சுரங்கப்பாதை:

இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் 1.6 கிலோமீட்டர் அளவில் அமைக்கப்பட்டிருக்கும் முதல் சுரங்கப்பாதையாகும்.

அடையாறு ஆற்றின் நீர் கடலில் கலப்பதால், பட்டினம்பாக்கம் கடற்கரையில் நுரை பொங்கி காணப்படுகிறது.
சென்னை கமலாலயத்தில்
தமிழக பா.ஜ.க அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தை விதிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்பது குறித்து பல்வேறு அமைப்புகளின் பிரதிகளுடன் போலீஸார் ஆலோசனை நடத்தினர்.
திருநெல்வேலி:

பி.ஜே.பி பிரமுகர் ஜெகன் பாண்டியன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.அவரது குடும்பதினருக்கு நயினார் நகேந்திரன் ஆறுதல் கூறினார்.

திருநெல்வேலி:

பி.ஜே.பி பிரமுகர் ஜெகன் பண்டியன் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

வேலூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சத்துவாச்சாரி காகிதப்பட்டறை சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.