Jawan: ராஜா ராணி முதல் பிகில் வரை..அட்லீயின் படங்கள் செய்த வசூல்..அடேங்கப்பா..!

​தெறிதன் இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார் அட்லீ. கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சமந்தா, மகேந்திரன், பிரபு என பலர் நடித்திருந்தனர். விஜய் போலீசாக இப்படத்தில் மிரட்டியிருப்பார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்திற்கும் ஒரு சில விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தெறி திரைப்படம் கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூலித்தது

​மெர்சல்தெறி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி மெர்சல் படத்தின் மூலம் இணைந்தது. விஜய் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டியிருப்பார். கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளி விருந்தாக வெளியான இத்திரைப்படம் வசூல் சாதனை செய்தது. ஒரு மாஸ் கமர்ஷியல் படமாக வெளியான மெர்சல் திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் இருந்து தான் இளைய தளபதி என அழைக்கப்பட்டு வந்த விஜய் தளபதியாக மாறினார். விஜய்யின் மார்க்கெட் அடுத்தகட்டத்துக்கு செல்ல தெறி, மெர்சல் மிகப்பெரிய காரணமாக அமைந்தது

​பிகில்தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி பிகில் படத்தின் மூலம் இணைந்தனர். 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. முன்பு இரண்டு படங்களை போல இல்லாமல் இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த குறையும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக மாறினார் அட்லீ. இந்நிலையில் விஜய்யின் மார்க்கெட் உயரவும், அவரின் சம்பளம் உயரவும் அட்லீயின் திரைப்படங்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது

​ராஜா ராணிஇன்று ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் அட்லீ ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என மல்டி ஸ்டாரர் படமாக வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. என்னதான் இப்படம் மௌன ராகம் படத்தின் கதை போல இருப்பதாக ஒரு சிலர் சொன்னாலும் தன் திரைக்கதையின் மூலம் வித்யாசம் காட்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிவரை வசூலித்தது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.