ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… 122 ஆண்டுகளுக்குப் பிறகு மழை செய்த சம்பவம்… வானிலை மையம் பகீர்!

122 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை மோசமான அளவு குறைந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைநாட்டின் பெரும்பாலான பகுதியின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். கோடைக்காலத்திற்கு பிறகு தொடங்கும் முதல் பருவமழை என்பதால் எப்போதுமே தென்மேற்கு பருவமழை மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்.
​ ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் தென்காசி விஞ்ஞானி!​ஜூன் டூ செப்டம்பர்ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையால் மழை மறைவு பகுதிகளின் நீர் தேவையை கூட பூர்த்தி செய்யப்படும். குமரி முனை, கேரளா என தொடங்கும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக முன்னேறி வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் மழை பொழிவை கொடுக்கும்.

ஓரேடியாக கொட்டிய மழைஹிமாச்சல், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரேடியாக கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சாலைகள், தண்டவாளங்கள் என அடிப்படை கட்டமைப்புகள் நிலை குலைந்தன.
​ ஆதித்யா எல் 1 மிஷன்: பறக்க தயாரான பிஎஸ்எல்வி சி 57… தொடங்கியது 24 மணி நேர கவுண்டவுன்!​பருவமழை தாமதம்
ஆனால் இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை, 8 நாள் தாமதமாக ஜூலை 8 ஆம் தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் போதுமான அளவு மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றது போலவே அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயலால் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் நல்ல மழை பொழிவை பெற்றன.

வறண்ட மாதம்1901 ஆம் ஆண்டில் வானிலை பதிவுகள் வைக்கப்படத் தொடங்கியதில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம்தான் நாடு முழுவதும் மிகவும் வறண்ட மாதமாகவும் வெப்பமானதாகவும் இருந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மழை பொழிவு நார்மலாக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.​ சிக்குவாரா சீமான்? விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு!​
122 ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான பருவமழை காலத்தில் பதிவான மழை அளவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதன்படி 1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது சுமார் 122 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் மோசமான மழை அளவை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இயல்பை விட குறைவுஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாத பருவமழை இயல்பை விட குறைவான அளவிலேயே முடிவடையும் என்றும் செப்டம்பர் மாதமும் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான பருவமழை கடந்த 122 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருந்தது என்றும் ஆகஸ்டு மாதம் 36% மழைப் பற்றாக்குறை இருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
​ திருப்பதியில் அடுத்த மாதம் இது கிடையாது… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.