அப்பாடா.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்.. இந்த வார இறுதியில் சரியான சம்பவம் இருக்காம்!

தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ள நிலையில் இந்திய வானிலை மையம் தற்போது நிம்மதி அளிக்கும் ஒரு தகவலை கூறியுள்ளது.

பருவமழைநாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் தென் மேற்மேற்கு பரமழை பெய்ய தொடங்கியது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இந்த பருவமழை காலத்தில் இதுவரை 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு இதுவரை பெறப்படவில்லை.

​ கியர் போட்டாச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்… குட் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்!​படுமோசம்
அதிலும் குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் படு மோசமான மாதம் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது. 1901ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் வறண்ட மாதமாக இருந்ததாகவும் இந்த மாதத்தில் மழையளவு பற்றாக்குறையாக இருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெவித்தது.
மீண்டும் சூடுபிடிக்கும்இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் சூடுபிடிக்கும் பருவமழையால் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ சம்பளம் உயர்வு அறிவிப்பு: கிராம அமைப்பு உதவியாளர்கள் ஹேப்பி – கேசிஆர் கொடுத்த சர்ப்ரைஸ்!​இயக்குநர் ஜெனரல்இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் மாதம் பெய்யும் மழையில் சராசரியான 167.9 மி.மீ.யில் 91 முதல் 109 சதவிகிதம் வரை பரவலாக பெய்யக்கூடும் என்றார். மேலும் 1901 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 122 ஆண்டுகளில் ஆகஸ்டில் பருவமழை மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.
எல் நினோஇது தவிர மத்திய இந்தியா மற்றும் தென் தீபகற்ப இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு 1901 க்குப் பிறகு மிகக் குறைவாக இருந்தது என்றும் இது மோசமான மாதங்களில் ஒன்றும் என்றும் கூறினார். எல் நினோ சூழல்தான் இந்த குறைவான மழைப்பொழிவுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
​ ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… 122 ஆண்டுகளுக்குப் பிறகு மழை செய்த சம்பவம்… வானிலை மையம் பகீர்!​இன்று முதல் மீண்டும்
இருப்பினும் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பரில் மழைப்பொழிவில் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார். செப்டம்பர் 2 அதாவது இன்று முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் புத்துயிர் பெரும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் நிம்மதி
முதலில் நாட்டின் கிழக்கு பகுதிகளில் தொடங்கும் இந்த மழை படிப்படியாக நாட்டின பிற பகுதிகளிக்கும் பரவும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது. இதனிடையே இன்று தெலுங்கானா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.