Moto G84 5G இந்தியாவில் வெளியானது! Snapdragon 695 ப்ராசஸர், 5,000mAh பேட்டரி என ஏராளமான சிறப்பம்சங்கள்!

மோட்டோ நிறுவனம் அறிவித்திருந்தபடி, இந்தியாவில் செப்டம்பர் 1ம் தேதி Moto G84 5G மொபைலை வெளியிட்டுள்ளது. அதில் Snapdragon ப்ராசஸர், 50 மெகாபிக்ஸல் கேமரா என பல்வேறு சிறப்பம்சங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. Moto G84 5G-ல் பொறுத்தப்பட்டுள்ள இதர ஸ்பெக்ஸ் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

​Moto G84 5G டிஸ்பிளேMoto G84 5G மொபைலில் 6.55 இன்ச் full-HD+ pOLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவை இடம்பெற்றுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் குறிப்பிட்டிருந்தபடியே 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.
Moto G84 5G ப்ராசஸர் மற்றும் பேட்டரிMoto G84 5G மொபைலில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், Snapdragon 695 SoC ப்ராசஸரும் இந்த மொபைலில் பொறுத்தப்பட்டுள்ளது.
​Moto G84 5G கேமராMoto G84 5G – ல் OIS வசதியோடு கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் கேமரா, 8 மெகாபிக்ஸல் மேக்ரோ விஷன் டெப்த் கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
​நிறங்கள், ஸ்டோரேஜ் மற்றும் விலைMoto G84 5G மொபைல் மூன்று நிறங்களில் வெளியாக உள்ளது. Viva Magenta , Marshmallow Blue, Midnight Blue ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகியுள்ளது. இது 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியில் வெளியாகியுள்ளது. இதன் விலை, 19,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி மதியம் 12 மணி முதல் இந்த மொபைல் விற்பனைக்கு வர உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.