அரசு ஊழியர்கள் ட்ரான்ஸ்பர்… ரூ.1,000 கோடி பகீர்… வந்தது புது உத்தரவு… கர்நாடகாவில் பரபரப்பு!

அரசு ஊழியர்கள் பணியிட மாறுதல் என்பது சில விதிமுறைகளுக்கு உட்பட்டது. ஆனால் பணம் கொடுத்து இடமாறுதல் உத்தரவை வாங்குவதாக கர்நாடகாவில் பெரிய சர்ச்சை கிளம்பியது. அதுவும் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த சில மாதங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் பலருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சர்ச்சையில் கர்நாடகா அரசுமேலும் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் இதில் உடந்தை என பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி எதிர்க்கட்சிகளான பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆளும் காங்கிரஸ் கட்சி மீது சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஹெச்.டி.குமாரசாமி கூறுகையில், அரசு ஊழியர்கள் பணியிட மாறுதலுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கொளுத்தி போட்டார்.முதலமைச்சர் மகன் மீது குற்றச்சாட்டுஇந்த விஷயத்தில் முதலமைச்சர் மகன் யந்திராவிற்கும் தொடர்பிருப்பதாக குமாரசாமி மேலும் அதிர்ச்சியூட்டினார். வணிக வரித்துறையில் மட்டும் எடுத்துக் கொண்டால் 200க்கும் மேற்பட்ட பணியிட மாறுதல்கள் கடந்த 2 மாதங்களில் மட்டுமே நடந்துள்ளன. அதுவும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர். எதற்காக இவ்வளவு மாறுதல்கள் என்ற சந்தேகம் எழுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குமாரசாமி சுட்டிக் காட்டினார்.
​காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடிகடந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் 40 சதவீத கமிஷன் விவகாரம் பாஜகவிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தது. இதேபோல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் பணம் கொடுத்து பணியிட மாறுதல் வாங்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசியல் ரீதியாக ஆளுங்கட்சிக்கு பின்னடைவாக மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி கருதியது. இந்நிலையில் இதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தும் வகையில் கர்நாடகா அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள் பணியிட மாறுதல்அதாவது, குரூப் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் நடப்பு நிதியாண்டில் 6 சதவீத அளவிற்கே மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யலாம். அதற்கு மேல் செய்ய வேண்டுமெனில் முதலமைச்சர் சித்தராமையாவின் ஒப்புதல் தேவை என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கூடுதல் செயலாளர் ஜே.டி.மதுசந்திரா தேஜஸ்வி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது ஏ, பி, சி, டி என அனைத்து பிரிவுகளை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
​பணி நீட்டிப்பிற்கும் ஒப்புதல் தேவைஇன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும் அரசு துறைகளில் ஊழியர்களின் பணிக்காலம் நீட்டிப்பிற்கும் முதலமைச்சரின் ஒப்புதல் என்பது அவசியம். இந்த உத்தரவை அனைத்து துறை தலைவர்கள், செயலாளர்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். ஒருவேளை ஏதாவது விதிமீறல் நடந்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
​கர்நாடகா அரசு விளக்கம்பணம் கொடுத்து பணியிட மாறுதல் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் விளைவாக தான் கர்நாடகா அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக பேசப்படும் நிலையில் வேறு வகையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடிக்கடி பணியிட மாறுதல் நடைபெறுவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே தான் மேற்கண்ட வகையில் உத்தரவு பிறப்பித்திருப்பதாக முதலமைச்சர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.