சனாதனத்துக்கும் சேகர்பாபுவுக்கும் என்ன சம்மந்தம்? மீண்டும் அண்ணாமலையை திட்டி தீர்த்த காயத்ரி ரகுராம்..

சென்னை தமுஎகச மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு, மலேரியா போல சனாதன தர்மமும் அழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இதனை கையிலெடுத்து உதயநிதிக்கு எதிராக அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியோடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார். இன்னும் ஒரு வார காலத்தில் சேகர்பாபு பதவி விலக வேண்டும். இல்லை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

சேகர் பாபுவின் அமைச்சர் பதவிக்கு பக்கா ஸ்கெட்ச்: பெரிய திட்டத்தோடு களமிறங்கும் அண்ணாமலை

இதுதொடர்பாக அண்ணாமலைக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் பாஜகவில் இருந்து விலகியவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம். அவர் தனது எக்ஸ் தளத்தில், “யாரு டா நீ? அறநிலையத் துறை அரசியலுக்கும் சனாதன தர்மத்திற்கும் என்ன தொடர்பு? சேகர் பாபு சார் தன் வேலையை மட்டும் செய்கிறார். அவர் சனாதன தர்மத்தை போதிக்கும் மந்திரி இல்லை. சனாதன தர்மத்திற்கும் கோவில் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை. அது கோவில் விதிகளோ மந்திரி விதிகளோ அல்ல. நல்லவனோ கெட்டவனோ எல்லாரும் கோவிலுக்கு வந்து மோதுவதற்கும், பாவங்களை போக்கவும், கருணை பெறவும், கடவுளிடம் அருள் பெறவும் அவர்கள் வருகிறார்கள். அவர்கள் வியாபாரத்திற்காகவோ அரசியல் நோக்கத்திற்காகவோ சனாதன தர்மத்திற்காகவோ கோயில்களுக்கு வருவதில்லை.

திருப்பதியை நோக்கி நகரும் ஐடி நிறுவனங்கள் – இளைஞர்களுக்கு அடிக்கும் செம ஜாக்பாட்

HRNCE என்பது கோவில்களைப் பராமரிப்பது, கோவில்களைப் பாதுகாப்பது. அவர்கள் சனாதன தர்மத்தைப் போதிப்பதில்லை. என்ன ஒரு ஜோக்கர்? திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்து, பொய் பேசு, ஆடு, தலைகீழாக குதி, இந்த முட்டாள்தனத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.