தேயிலை விலை கடும் வீழ்ச்சி: அரசு உடனே செய்ய வேண்டியது இதை தான் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பசுந்தேயிலையின் விலை ரூ. 12/- வரை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசு செய்ய வேண்டியவை என்ன?

“விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், பசுந்தேயிலைக்கான உண்மையான உற்பத்தி செலவு குறித்த தோட்டக் கலைத் துறையின் பரிந்துரைகள் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின், விவசாய விளை பொருட்களுக்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, பசுந்தேயிலைக்கு யதார்த்தமான குறைந்தபட்ச ஆதார விலையை, அதாவது 1 கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 33.50/-ஐ நிர்ணயம் செய்திட வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டம்!

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாக்குபெட்டா படுகர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 1.9.2023 முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.” என்று கூறினார்.

திமுக அரசை கண்டித்து கரூரில் பாஜக சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம்

மேலும் அவர், “பசுந்தேயிலையின் விலை மிகவும் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் பிரதிநிதிகளை திமுக அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

கிலோவுக்கு 10 ரூபாய் மானியம்!

உடனடித் தீர்வாக அம்மா அரசு வழங்கியது போல், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 10/- மானியமாக வழங்கிட வேண்டும். மேலும், அவர்களது கோரிக்கையான பசுந்தேயிலை ஒரு கிலோவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 33.50-ஐ பெற்றுத் தந்திட, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.