என்னது மீண்டும் மீண்டுமா.. ஒரே பெண்ணை 2வது முறையாக திருமணம் செய்யும் ஷாகின் அப்ரிடி!

Shaheen Afridi Second Time Marriage: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அந்த வகையில், ஆசிய கோப்பை தொடரின் முடிவில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி மீண்டும் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக நேற்று மாலை முதல் செய்திகள் வெளியாகின்றன. 

ஆசிய கோப்பை தொடர் நிறைவடைந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஷாகின் அப்ரிடி தனது மனைவி அன்ஷாவுடன் மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஷாகின் அப்ரிடியின் மனனைவி அன்ஷா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் மகள் ஆவார. இந்த ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

ஷாகின் மற்றும் அன்ஷா ஆகியோரின் இரண்டாவது திருமணம் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை ஷாகின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாமனார் ஷாகித் அப்ரிடியும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இருப்பினும், இரண்டாவது சுற்று திருமணம் குறித்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஏன் மீண்டும் திருமணம்?

ஷாகினும் அன்ஷாவும் பிப்ரவரியில் பாரம்பரிய அப்ரிடி பழங்குடி சடங்குகளின்படி திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஷதாப் கான், சர்பராஸ் அகமது உள்ளிட்ட ஷாகினின் சிறந்த நண்பர்கள் சிலர் அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தற்போது பெரிய அளவில் இந்த ஜோடி மீண்டும் திருமணம் செய்து கொள்கிறது. அதாவது, அந்த திருமண நிகழ்வை பிரமாண்டமாகவும் பெரியதாகவும் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் கராச்சியில் பாரத் விழாவுடன் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பதும் கூறப்படுகிறது.

ஆனால் ஹனிமூன்…?

செப்டம்பர் 19ஆம் தேதி அன்று அவர்களின் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, ஷாகின் மற்றும் அன்ஷாவுக்கு தேனிலவு இருக்காது என தெரிகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சளாரன ஷாகின் அப்ரிடி, இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கிறார். அந்த உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் போட்டியுடன் தொடங்குகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது.

ஷாகின் அப்ரிடி தற்போது ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு துருப்புச்சீட்டாக உள்ளார். முதல் ஓவரிலேயே பேட்டர்களை அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சிற்காக புகழ்பெற்றவர். நடப்பு ஆசிய கோப்பையில் இந்தியாவுடனான முதல் சுற்று போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

கொழும்பில் நாளை நடைபெறும் சூப்பர் 4 மோதலில் ஷாகின் அசத்தலாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது. இரண்டு பரம எதிரிகளும் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிரடியாக நடைபெறுகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டாலும், வெளிச்சந்தையில் இந்த டிக்கெட்டுகள் ரூ. 50 லட்சத்திற்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.