'ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை என்றால் அவர் பார்மில் இல்லை என்று அர்த்தம் இல்லை'- கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ச…

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி), இலங்கை (2 வெற்றி, ஒரு தோல்வி) தலா 4 புள்ளிகள் பெற்றன. ரன்-ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக “விராட் கோலியின் பார்ம் இந்தியாவுக்கு நல்லது” என கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘கோலி 2023ஆம் ஆண்டில் சிறந்த பார்மில் உள்ளார். அவர் பெரிய ரன்களை எடுக்காத ஒரு கட்டம் இருந்தது. ஆனால் அது அவர் பார்மில் இல்லை என்பது போல் இல்லை. அவர் ரன் அடித்தார். ஆனால், சதம் அடிக்கவில்லை. அவர் சதம் அடிக்கவில்லை என்றால், பார்மில் இல்லை என்று அர்த்தம் இல்லை. இப்போது நன்றாக விளையாடுகிறார். அவரது பார்ம் இந்தியாவுக்கு நல்லது’ என்று கூறினார்.

மேலும் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் போட்டியைப் பற்றி பேசுகையில், ‘ஆசிய கோப்பையின் வெற்றியானது, வரவிருக்கும் 2023 ஐசிசி உலகக்கோப்பையில் அணிக்கு ஒரு பெரிய உளவியல் சாதகமாக இருக்கும். இது ஒரு பெரிய போட்டி. போட்டியில் வெற்றி பெறுபவர் ஆசிய கோப்பை சாம்பியனாவார். உலகக்கோப்பைக்கு முன் அனைத்து ஆசிய அணிகளையும் வீழ்த்துவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. அதனால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். இந்தியா சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.