IND vs SL: இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு… போட்டி எப்போது தொடங்கும்?

Asia Cup Final, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.  ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், வங்கதேச அணியுடனான கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகியதால் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார், இன்று அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சிராஜ், பும்ரா, குல்தீப் யாத்வ் ஆகியோர் அணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் திட்டம் இதுதான்

இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், இந்த போட்டியில் அவருக்கு பதில் துஷன் ஹேமந்தா விளையாட உள்ளார். வேறு எந்த மாற்றத்தையும் இலங்கை செய்யவில்லை. மேலும், சூப்பர் 4 சுற்றில் சேஸ் செய்து இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார், இலங்கை கேப்டன் ஷனகா. தான் டாஸ் வென்றிருந்தாலும், பேட்டிங்கை தான் எடுத்திருப்போம் என ரோஹித் கூறியிருந்தார்.

 Toss & Team News from Colombo

Sri Lanka have elected to bat against #TeamIndia in the #AsiaCup2023 Final.

Here’s our Playing XI #INDvSL

Follow the match  https://t.co/xrKl5d85dN pic.twitter.com/tzLDct6Ppb

— BCCI (@BCCI) September 17, 2023

இந்திய பந்துவீச்சு படை 

குறிப்பாக, இந்திய அணி சேஸிங்கில் சற்று தடுமாறி வருகிறது. கடந்த வங்கதேச போட்டியிலும் சேஸிங் செய்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைடந்தது. எனவே, இன்றைய இறுதிப்போட்டியில் இந்திய அணி முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஜடேஜா – குல்தீப் – வாஷிங்டன் என சுழற்பந்துவீச்சில் தற்போது அனைத்து வெரைட்டியையும் இந்தியா கொண்டு வந்துள்ளது. வேகப்பந்துவீச்சில் பும்ரா – சிராஜ் – ஹர்திக் என ஓப்பனிங் ஓவர்கள், டெத் ஓவர்கள், மிடில் ஓவர்களில் தாக்குதல் செய்யும் படையும் தயாராக உள்ளது.

துருப்புச்சீட்டு விராட் கோலி

பேட்டிங் ஆர்டரிலும் 8ஆவது வீரர் வரை பேட்டிங் உள்ளது. பெரிய போட்டிகளில் விராட் கோலி நெருக்கடி இல்லாமல் விளையாடுவார் என்பதாலும், போட்டி நடைபெறும் பிரேமதாச மைதானத்தில் அவர் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 சதத்தை பதிவு செய்துள்ளார் என்பதாலும் இன்றைய போட்டியில் அவர் துருப்புச்சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா – இலங்கை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாகி வருகிறது. தற்போது களத்தில் இருக்கும் விரிப்புகளை மைதான பராமரிப்பாளர்கள் அகற்றி வருவதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மைதானத்தை நடுவர்கள் பார்வையிட்ட பின், போட்டி மதியம் 3. 45 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மழை வாய்ப்பு இருப்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் இந்திய அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.