எந்த பக்கம் திரும்பினாலும் அடி… பும்ராவை ஓடவிட்ட ஆஸ்திரேலியா – நொந்துபோன இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இருப்பினும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அந்த அணியை தோற்கடித்து ஓயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது. பிளேயிங் லெவனை பொறுத்தவரை சுப்மான் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, பும்ரா ஆகியோர் ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியுள்ளனர்.

டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் ராஜ்கோட் இந்திய மைதானங்களிலேயே பேட்டிங் விளையாட சொர்க்க பூமி என அழைக்கப்படும் மைதானம். அதனால் டாஸ் வெற்றி பெற்றவுடன் முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு மெகா இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது. அதற்கேற்ப டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 

திக்கு முக்காடிய பும்ரா

குறிப்பாக இந்திய அணியின் ஸ்டார் பவுலரான பும்ராவின் பந்துவீச்சை களம் எட்டில் வைத்து பொளந்து எடுத்தனர் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ். குறிப்பாக மிட்செல் மார்ஷ், பும்ராவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து மிரள வைத்தார். ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியிருப்பதால் அவர் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ராவின் ஓவரை ஆஸ்திரேலியா அடித்தது இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் என யார் பந்துவீச வந்தாலும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். 7 ரன்களுக்கும் குறையில்லாமல் ரன்ரேட் சென்று கொண்டிருக்கிறது. 

400 ரன்களை நோக்கி ஆஸ்திரேலியா

இதே நிலை கடைசி வரை நீடித்தால் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எளிதாக எட்டிவிடும். 31 ஓவர்கள் முடியும் வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். 96 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் மார்ஷ். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.