நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது

நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது

நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துதரிஸ்டவசமாக கடந்த கொரோனா தொற்று நோயின் தாக்கத்தால் பாரிய வீழ்ச்சியை அடைந்த அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கு மீண்டும் புத்துயிர் அளித்து அதனை ஊக்கப்படுத்த தனது கடல்தொழில் அமைச்சும் நெக்டா நிறுவனமும் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்த அதேவேளை இன்றைய நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சரங்க ரணசிங்க முன் வந்தது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார் .

கொழும்பில் தப்ரபேன் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அக்கியுவா பியஸ்டா” எனும் அலங்கார மீன்கள் கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்….
நன்னீர் மீன் உயிரின உற்பத்திக்கு நெக்டா நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நூறு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாகவும் அந்த நிதியிலிருந்தும் அலங்கார மீன்வளர்ப்புத் துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர்,

அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஏற்மதித் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய ஏற்பாட்டாளர்களுக்கு தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.