ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்…அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து…!

டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் குர்பாஸ் 80 ரன், இக்ராம் 58 ரன் எடுத்தனர். இதையடுத்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் பேர்ஸ்டோ 2 ரன், மலான் 32 ரன், ரூட் 11 ரன், பட்லர் 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து புரூக், லிவிங்ஸ்டன் இணை அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.