நடப்பு சாம்பியனுக்கு ஆப்பு… இங்கிலாந்துக்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி வைத்தியம்!

ENG vs AFG: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம், இந்தியா என இரண்டு ஆசிய அணிகளிடம் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்து, வங்கதேசத்திடம் வெற்றிப் பெற்றிருந்தது. 

அந்த வகையில், நம்பிக்கை களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களுக்கு 284 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 86 ரன்களையும், இக்ரம் 58 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.#ZeeTamilNews #iccworldcup2023 #ENGvsAFG #sportsupdate #cricket pic.twitter.com/bsf9FoFi9I

— Zee Tamil News (@ZeeTamilNews) October 15, 2023

285 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் நெருக்கடி கொடுத்தது. அதன்படி, 40.3 ஓவர்களிலேயே 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.